Saturday, December 19, 2020

வெற்றியின் இரகசியம்

Deepa Dhanapal:
Good morning 👍* *வெற்றியின் இரகசியம்* 👍
..........................................

''உங்கள் பக்கத்தில் இருப்பது யார்??..
...........................................

சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெலல அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக் கொள்கிறது.
முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள்,

உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? உற்சாகமானவரா? சுறுசுறுப்பானவரா? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா?

இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்.

மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறானவர்களால் வீழ்ந்து இருக்கிறார்கள்.

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டு இருந்தது..காரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். கார் திடிரென்று நின்றது. ஓட்டுனர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தவரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

மற்ற நண்பரால் தூங்க முடியவில்லை.   ஓட்டுனர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தார்...

ஆம்.,நண்பர்களே..,

பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது.

லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெறுவதைப் போலவே உங்களைப் பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்.

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகில் உள்ள அனைவரும் உங்களை விரும்புவார்கள்.

கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்... உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.......எனவே *நீங்கள் வெற்றியாளர்களையும், வெற்றி பெற நினைப்பவர்களிடமும் உங்களை இனைத்துக்கொள்ளுங்கள்.வெற்றி நிச்சயம்*

வாழ்க்கை என்பது அழகான பயணம்

 *#தினமும் காலையில் எழுந்தவுடன் (4.30am to 6 am)ஆகாயத்தை பார்த்து " அண்ட சராசரத்தில் நிறைந்திருக்கும் என் பிரபஞ்சத் தந்தையே உங்களின் அபரிமிதமான சக்தி என் உடல் ,மனம்,ஆன்மா மூன்றிலும் இருந்து கொண்டிருக்கிறது.." என்று 5 முறை சொல்லுங்கள். உங்கள் தேவைகளை பிரபஞ்சம் நிறைவேற்றும்.*


#நீங்கள் ஒவ்வொரு நாளும் உற்சாகமாக இருக்க,

.

தினமும் காலையில் எழுந்த உடன் உங்கள் கால் தரையில் படுவதற்கு முன்னர் இந்த நன்றிகளை சொல்லுங்கள்...

.

இந்த நன்றிகள் உங்கள் வாழ்க்கையை மாற்ற கூடிய வேண்டுதல்கள் / பிராத்தனைகள் / ஜெபங்கள் / துவாக்கள்

.

நன்றி , நன்றி, நன்றி, 

என்னை சிறப்பாக வைத்து கொண்டு இருப்பதற்கு நன்றி..

.

என்னை ஆரோக்கியமாக வைத்து கொண்டு இருப்பதற்கு நன்றி...

.

என்னை வலிமையாக வைத்து கொண்டு இருப்பதற்கு நன்றி...

.

என்னை அறிவாளியாக வைத்து கொண்டு இருப்பதற்கு நன்றி..

.

என்னை கம்பீரமாகவும், மாயஜாலமாகவும் ,அன்பாகவும் வைத்து கொண்டு இருப்பதற்கு நன்றி..

.

என்னை நல்ல மனிதராக வைத்து கொண்டு இருப்பதற்கு நன்றி.

.

என்னை செல்வ செழிப்போடு, நன்றியோடு வைத்து கொண்டு இருப்பதற்கு நன்றி..

.

என்னை அற்புதமாக வைத்து கொண்டு இருப்பதற்கு நன்றி..

.

என்று தினமும் காலை எழுந்த உடன் மற்றும் இரவில் தூங்க செல்வதற்கு முன்னரும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள்....

.

நீங்கள் நன்றிகளை சொல்லி கொண்டே இருக்கும்போது மாயாஜாலத்தை உணர்வீர்கள்....

.

சந்தோசத்தை உணர்வீர்கள்.....உங்கள் லட்சியங்களுக்கு நீங்கள் காந்தமாக உணர்வீர்கள்...

.

உங்களிடம் நன்றியுணர்வு அதிகரிக்க அதிகரிக்க உங்களிடம் நல்ல உணர்வுகள் அதிகரிக்கும். 

.

உங்களிடம் இருந்த பொறமை , பேராசை, மனஅழுத்தம் , கவலைகள், பயம் எல்லாம் மறைந்து போகும். மேலும் அவற்றை மீண்டும் உங்களிடம் வர அனுமதிக்காது.

.

உங்கள் மனதில் தெளிவு பிறக்கும், உங்களை சுற்றி எப்போதும் நேர்மறையான vibration இருக்கும்.


#பாசிட்டிவ்வாக #இருப்பவர்களோடு #பழகுங்கள்*


நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். 

_எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்து கொள்ளாதீர்கள்._


*"தெரியாது', "நடக்காது', "முடியாது' , "கிடைக்காது'* என சொல்பவர்களை விரட்டி விடுங்கள்.


*உற்சாகமாக இருங்கள்*

சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.

இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், *இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்து விட முடியாது* என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.


*பவர்ஃபுல்லாக உணருங்கள்*

உடல் வலிமை, 

பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி 

*மனவலிமை மிக முக்கியம்.*

உங்களைப் போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. 

உடனே சிரிக்காதீர்கள். இது தான் நிஜம். *உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.*


_உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்._


*நேசியுங்கள்*

உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.

_உங்களை உங்களுக்குப் பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்._


உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்குப் புரிய வையுங்கள்.


உங்களைப் போல அழகானவர் யாரும் இல்லை, 

உங்களைப் போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நீங்களே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.


*பயணப்படுங்கள்*

வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது. 

_இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றி எளிதில் வரும், சிலருக்கு *தாமதமாக* வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது._ வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.


*வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது.* ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கி.  றதோ இல்லையோ, *உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்.*  ....