Friday, November 22, 2019

மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி


🌷💐🌷💐🌷💐🌷

இன்று எனக்குள் புத்துணர்வுடன் கூடிய
புதுத்தெளிவை உணர்கிறேன்.
பெரும் பணவரவு இன்று
என்னிடம்வர தயாராக இருக்கிறது.
என் எண்ணங்கள் எல்லாம் இன்று ஈடேரும்  என்பதை என் மனம் உணர்கிறது.

🌷💐🌷💐🌷💐🌷

நன்றி இறைவா!

🌷மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி 🌷

ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப்படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி

வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும். முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது. இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு பயன்படுத்திக் கொண்டு சிறந்தபலன் கண்டவர்கள் ரஷியர்கள்.
ஆழ்மன சக்திகள் குறித்து முதல் முதலில் அதிகமாக ஆராய்ந்த நாடுகளில் முதலிடம் ரஷ்யாவுக்குத்தான்.

டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி, கால்ஃப் வீரரான ஜேக் நிக்ளாஸ், கால் பந்தாட்ட வீரர் பீலே போன்றவர்கள் தங்கள் துறையில் சிகரத்தை எட்டி வரலாறு படைத்தவர்கள். அவர்களும், அவர்களைப் போன்ற பல வெற்றி வீரர்களும் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்பவர்களே

சக்கரவர்த்தியாவதும் சரி ஒலிம்பிக்கில் கோப்பைகள் வாங்குவதும் சரி கடும் நோய் குணமாவதும் சரி எதுவானலும் சரி நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.

இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும்.
அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்.
🌷💐🌷💐🌷💐🌷

ரகசியம் புத்தகத்திலிருந்து


🌷ரகசியம் புத்தகத்திலிருந்து🌷

🌹எனக்கு எப்பொழுதும் மிகவும் உத்வேகம் தரும்
வாசகங்கள் இதோ🌹

🌷 நடந்தது நடந்துகொண்டிருப்பது
நடக்கப்போவது யாவற்றிக்கும்
இந்த ரகசியமே பதிலாக உள்ளது.

🌷 உங்கள் எண்ணமும் உணர்வும் உங்கள் வாழ்கையை உருவாக்குகிறது.

🌷 நீங்கள் பயணப்படும் போதே உங்களுக்கென தனிபிரபஞ்சத்தை உருவாக்குகிறீர்கள்.

🌷 நம்பிக்யைுடன் முதல் அடியை எடுத்து வையுங்கள் முழுபடிக்கட்டையும் பார்க்கத் தேவையில்லை முதல் படியில் ஏறுங்கள்

🌷 நம் எண்ணங்களின் வெளிப்பாடே நம் இன்றைய நிலை

🌷 இந்த சக்தி என்னவென்று என்னால் சொல்ல முடியாது அது இருக்கின்றது என்பது மட்டும் எனக்கு தெரியும்.

🌷 கற்பனைதான் எல்லாமும் அதுதான் வாழ்வில் வரவிருக்கும் வசிகரங்களின் முன்னோட்டம்

🌷 மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ அதனால் அதை அடைய முடியும்

🌷 உங்களுக்கு ஒரு உத்வேகமான ஒரு எண்ணம் ஏற்பட்டால் அதை நம்பி உடனே செயலில் இறங்க வேண்டும் என்பதுதான் ரகசியம்.

🌷 கவனம் போகின்ற இடத்தில் சக்தி பாயும்

🌷 சக்தியே(ஆற்றல்) இந்த பிரபஞ்சத்தை ஆட்கொண்டிருக்கிறது.

🌷 சக்தி என்பது நமக்குள்ளே உள்ளது அதனால் அது நமது கட்டுப்பாட்டில் உள்ளது.

🌷 நீங்கள் எல்லையற்ற சக்தி உடையவர் உங்களுக்கு உச்சவரம்பே கிடையாது

🌷 உங்கள் உள்ளுணர்வின்படி செயல்படுங்கள் அது உங்களை எங்கே அழைத்து செல்கிறேதோ அங்கே தைரியமாக செல்லுங்கள் தடைகள் நீங்கி வெறும் சுவர்கள் மட்டுமே இருக்கக்கூடிய இடத்தில் ஒரு புதிய பிரபஞ்சத்தின் கதவுகள் உங்களுக்காக திறக்கும்.

🌹🌹🌹🌹🌹🌹🌹

பிரபஞ்ச சக்திக்கு நன்றி!

🌺🌺🌺🌺🌺🌺🌺

நன்றி! நன்றி! நன்றி!
💐💐💐💐💐💐💐

Friday, April 26, 2019

நன்றியுணர்வு அனைத்தையும் மாற்ற வல்லது


நன்றியுணர்வு அனைத்தையும் மாற்ற வல்லது

நன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள்.

. ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நன்றியுணர்வு அவனிடம் இல்லாமல் போனால் அவன் மதிக்கத்தக்கவனாக மாட்டான்.
. நமக்கு பரிசு தந்தவனுக்கு பெரிதாக நன்றி கூறுகிறோம், ஆனால் இந்த வாழ்க்கையை நமக்கு தந்த இறைவனுக்கு என்றாவது நன்றி கூறியிருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
.நன்றியுள்ள ஆத்மாக்களுக்குத்தான் இறைவன் மேலும் மேலும் வெகுமதியளித்து உதவுகிறான்.

. கடவுளின் எல்லையற்ற அன்புக்கு நன்றி கூறுவோம். நம்மை நேசிக்கின்ற இதயங்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம். கடவுள் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

. கீழ்வரும் வார்த்தைகளை எப்போதும் கூறுங்கள் வாழ்க்கை செழிக்கும் :
 அ. "உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறோம்".

ஆ. "நீ எவ்வளவு அன்புடன் இருக்கிறாய்".

இ. 'உன் உதவி எனக்கு தேவை".

ஈ. "நீ என்னுடன் இருந்தால் எனக்கு உற்சாகமாக இருக்கும்".

. நன்றி எப்படிப்பட்டது என்றது முக்கியமில்லை அது உங்கள் இதயத்தில் இருந்து வருகிறதா என்பதுதான் முக்கியம்.

. வேலை செய்யும்போதும் வேலை வாங்கும் போதும் பரஸ்பரம் நன்றி கூற வேண்டும்.
. சம்பளம் கொடுப்பது மட்டும் முக்கியமில்லை செய்த வேலைகளை பாராட்டுவதும், நன்றி கூறுவதும் முக்கியம்.
. "நான் என்னைச் சுற்றி துதிபாடுகின்ற கூட்டத்தை மட்டும் உருவாக்கிக் கொண்டேன்,
நண்பர்களை நான் உருவாக்க முயற்சிக்கவில்லை" என்று நெப்போலியன் சொன்னான். இறக்கும்போது அவன் தனி மனிதனாகவே இறந்தான்.

. ஜனாதிபதி தேர்தலில் வென்ற ஆபிரகாம் லிங்கனுக்கு அதிக நண்பர்கள் இருந்தார்கள் வேறெதுவும் அவரிடமிருக்கவில்லை.
அவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது கோட் சூட் தைக்க பணம் இல்லாமல் கடன் வாங்கினார்.
.  நண்பர்கள் இருக்கும்வரை எவரும் பயனில்லாதவர் ஆகிவிடுவதில்லை.

. பயன் கருதி நட்பைத் தேடுவது வான வீதியில் இருந்து தங்கத்தைப் பெறச் செய்கின்ற முயற்சி போன்றது.

. நட்புடன் இருப்பவனைப் போல நல்ல வேலையாள் உலகில் கிடையாது. நல்ல நட்புடன் இருப்பவன் வாழ்க்கையில் பெரிய முதலீடு போன்றவன்.

. மற்றவர்களின் புன்முறுவலுடன் பழகுங்கள். முகத்தைச் சுளிப்பதற்கு 72 தசைகள் வேண்டியிருக்கிறது, புன்முறுவல் செய்ய 14 தசைகளே போதுமானவை.

. தனி நபராக உங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கென்றே கடவுள் சில பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார். உங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றவருக்கு இல்லை என்பதை உணர வேண்டும்.

 இந்த உலகத்தை சிறப்பாக்க உங்கள் பங்கும் இருக்கிறது. அந்தக் காரியத்தை உங்களைவிட மற்ற எவராலும் செய்ய முடியாது.

. கடவுளிடமும், மனிதனிடமும் நீங்கள் காட்டுகிற அன்பு மேலோங்கட்டும். எந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் நேசிக்கவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள்.
உங்களை விட தாழ்ந்தவர்கள் உங்களிடமிருந்து அதிகமான அன்பை பெறும் தகுதி உடையவர். அன்பை கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.

. பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள்.தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

. மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.

. ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் உள்ளே புகுந்து வேலை செய்யுங்கள். செயல்களை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும்.

. கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை.
எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.

. நமது உள்ளத்தில் எப்போதும் நன்றியுணர்வு ஒலிக்க வேண்டும். நன்றி கூறுவது ஒருபோதும் உங்கள் கௌரவத்தை தாழ்த்திவிடாது.

நன்றியுணர்வு  நம்மிடம் பெருகும் போது நாம் எடுக்கும் காரியங்கள்
ஜெயமாகும்

Sunday, April 14, 2019

பிரபஞ்ச சக்தி


'சக்தி' என்ற
புத்தகத்தில் இருந்து சில துளிகள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌟 சக்தி 🌟

இப்பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள அனைத்து முழுமைக்கும் இதுதான் காரணம்.

நீங்கள் நிச்சயமாக ஒரு மகத்தான வாழ்க்கை வாழத்தான் பிறந்திருக்கிறீர்கள்

நீங்கள் நேசிக்கும் மற்றும் விரும்பும் அனைத்தையும் நீங்கள் நிச்சயமாக பெறத்தான் வேண்டும். நீங்கள் சாதிக்க விரும்பும் அனைத்து விஷயங்களையும் நீங்கள் கண்டிப்பாக சாதிக்கத்தான் வேண்டும்.
உங்கள் குடும்பத்தினருடனான உங்களது உறவுகளும் உங்கள் நண்பர்களுடனான உங்கள் உறவுகளும் மகிழ்ச்சியால் நிரம்பி வழியத்தான் வேண்டும். ஒரு முழுமையான அற்புதமான வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான அனைத்து பணத்தையும் நீங்கள் கைவசப்படுத்த தான் வேண்டும். உங்களது அனைத்து கனவுகளையும் நீங்கள் நனவாக்க தான் வேண்டும்.
நீங்கள் பயணம் செய்ய விரும்பினால் நிச்சயம் நீங்கள் பயணிக்க தான் வேண்டும்.
நீங்கள் வியாபாரத்தை துவக்க விரும்பினால் நீங்கள் அதை  துவக்கியாகத்தான் வேண்டும்.
 நீங்கள் நடனம் கற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது உல்லாச படகை செலுத்த கற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது இத்தாலிய மொழியை கற்றுக்கொள்ள விரும்பினாலோ நீங்கள்  நீங்கள் ஒரு இசைக் கலைஞராகவோ அல்லது அறிஞராகவோ அல்லது ஒரு கண்டுபிடிப்பாளராக  ஒரு  பெற்றோராகவோ அல்லது எதுவாக ஆக விரும்பினாலும் நீங்கள் அதுவாக ஆகத்தான் வேண்டும்

நீங்கள் ஒவ்வொரு நாளும் விழித்தெழும் போதும் உற்சாகத்தால் நிரம்பி வழிய வேண்டும். ஏனெனில் அன்றைய நாள் முழுவதும் மாபெரும் விஷயங்களால் நிரம்பியிருக்க போவதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள் சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீங்கள் வலிமையாகவும் பாதுகாப்பாகவும் உணர வேண்டும்.
உங்களைப் பற்றி நீங்கள் சிறப்பாக உணர்ந்தாக வேண்டும்.
நீங்கள் விலைமதிப்பற்றவர் என்பதை நீங்கள்  அறிந்தாக வேண்டும்.

நீங்கள்  வெற்றி பெற்றே ஆக வேண்டும்

நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தே ஆக   வேண்டும்.

நீங்கள் ஒரு மகத்தான வாழ்க்கையை வாழ்ந்தே ஆக வேண்டும்

வாழ்வை முழுமையாக அனுபவித்து நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறத்தான் வேண்டும்.
அதே நேரத்தில் நீங்கள் ஆரோக்கியத்தாலும் மகிழ்ச்சியாலும் வலிமையாலும் உற்சாகத்தாலும்
அன்பாலும் நிறைந்திருக்க வேண்டும்.
ஏனெனில் அதுதான் ஒரு மகத்தான வாழ்க்கை.

நீங்கள் என்னவெல்லாம் ஆக விரும்புகிறீர்களோ எவற்றையெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ எவற்றையெல்லாம் பெற விரும்புகிறீர்களோ
அதை அடைவதற்கான சக்தி உங்களிடம் இருக்கிறது

நல்ல விஷயங்களையே அதிகரிக்க முடியும்
உங்கள் வாழ்வில் உள்ள எந்த ஒரு எதிர்மறையான விஷயத்தையும் மாற்ற முடியும்
உங்கள்ஆரோக்கியம் செல்வம் வேலை உறவுகள் மற்றும் உங்கள் வாழ்வின் எந்த ஒரு பகுதியிலும் ஆதிக்கம் செலுத்தி அவற்றை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் சக்தி உங்களிடம்தான் இருக்கிறது.

உங்கள் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தி உங்களிடம் உள்ளது

அந்த ஆதிக்க சக்தி உங்களுக்குள் இருக்கிறது

அதுதான் அன்பு சக்தி அன்பு தான் நேர்மறை சக்தி யின் உச்சகட்ட ஆற்றல்.

🌷 கொடுத்தல்
பெறுதல் விதி 🌷

கொடுத்தல் என்னும் ஒவ்வொரு வினையும்
பெறுதல் என்னும் எதிர்வினையை உருவாக்குகிறது.
நீங்கள் பெறுபவை நீங்கள் கொடுத்தவற்றிருக்கு  இணையாகவே எப்போதும் இருக்கும்.

உங்கள் வாழ்வில் நீங்கள் எவற்றை வெளிப்படுத்து
கிறார்களோ? அவை மீண்டும் உங்களிடம் வந்தாக வேண்டும்.
பிரபஞ்சத்தின் இயற்பியல் மற்றும் கணிதம் இது.

நீங்கள் நேர்மறையாக நடந்து கொண்டால் நேர்மறையானவற்றைத் திரும்பப் பெறுவீர்கள்

எதிர்மறையான போக்கை வெளிப்படுத்தினால்  எதிர்மறையான விளைவுகளையே திரும்பப் பெறுவீர்கள்

நேர்மறையான போக்கை வெளிப்படுத்தினால்  நேர்மறையான விஷயங்கள் நிறைந்த ஒரு வாழ்க்கையை திரும்பப் பெறுவீர்கள்

எதிர்மறை போக்கை வெளிப்படுத்தினால் எதிர்மறையான விஷயங்கள் நிறைந்த ஒரு வாழ்க்கையை திரும்பப் பெறுவீர்கள்.

நீங்கள் எவ்வாறு நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ நடந்து கொள்கிறீர்கள் உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் மூலம் தான்.

வெற்றியின் இரகசியம்

* *வெற்றியின் இரகசியம்* 👍
..........................................

''உங்கள் பக்கத்தில் இருப்பது யார்??..
...........................................

சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெலல அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக் கொள்கிறது.
முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள்,

உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? உற்சாகமானவரா? சுறுசுறுப்பானவரா? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா?

இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்.

மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறானவர்களால் வீழ்ந்து இருக்கிறார்கள்.

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டு இருந்தது..காரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். கார் திடிரென்று நின்றது. ஓட்டுனர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தவரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

மற்ற நண்பரால் தூங்க முடியவில்லை.   ஓட்டுனர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தார்...

ஆம்.,நண்பர்களே..,

பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது.

லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெறுவதைப் போலவே உங்களைப் பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்.

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகில் உள்ள அனைவரும் உங்களை விரும்புவார்கள்.

கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்... உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.......எனவே *நீங்கள் வெற்றியாளர்களையும், வெற்றி பெற நினைப்பவர்களிடமும் உங்களை இனைத்துக்கொள்ளுங்கள்.வெற்றி நிச்சயம்*

ஒவ்வொரு கணத்திலும் அற்புதம்


எந்த ஒரு கணத்திலும் நீங்கள் நேர்மறையான சிந்தனையை வெளிப்படுத்துகிறீர்கள் அல்லது எதிர்மறையான சிந்தனையை வெளிப்படுத்துகிறீர்கள். நீங்கள் நேர்மறையான உணர்வுகளை கொண்டிருக்கிறீர்கள் அல்லது எதிர்மறையான உணர்வுகளை கொண்டிருக்கிறீர்கள்.


அவை நேர்மறையானவையா அல்லது எதிர்மறையானவையா என்பதை பொறுத்துத்தான் உங்கள் வாழ்வில் நீங்கள் திரும்பப்பெறும் விஷயங்களும் தீர்மானிக்கப்படுகின்றன

உங்கள் வாழ்வில் ஒவ்வொரு கணத்தையும் உருவாக்கும் அனைத்து 
மக்கள்களும்,
சூழல்களும், நிகழ்வுகளும் நீங்கள் வெளிப்படுத்தும் எண்ணங்களாலும் உணர்வுகளாலும் உங்களிடம் ஈர்க்கப்படுகின்றனர்.

"வாழ்க்கை ஏதோ தானாக உங்களுக்கு நிகழவில்லை
நீங்கள் எதை கொடுத்துருக்கிறீர்களோ அதன் அடிப்படையில் உங்கள் வாழ்வில்
நீங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறீர்கள்".

நீங்கள் எதுவாக இருக்க வேண்டும்.
எவற்றை எல்லாம் செய்ய வேண்டும். எவற்றையெல்லாம் பெற வேண்டும் என்று விரும்பி கனவு கண்டுகொண்டு இருக்கிறீர்களோ? அந்த கனவு வாழ்க்கை நீங்கள் நினைத்திருந்ததை விடவும் 
வெகு அருகிலேயே எப்பொழுதும் இருந்து வந்துள்ளது.
நீங்கள் விரும்பும் அனைத்துக்குமான சக்தி உங்களுக்குள்தான் இருக்கிறது.

"ஓர் ஒப்புயர்வற்ற சக்தி
ஒரு கோலோச்சும் ஆற்றல் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பரவி
ஆட்சி செலுத்தி வருகிறது.
நீங்கள் இந்த சக்தியின் ஓர் அங்கம்".

நன்றி நன்றி நன்றி

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

கர்ம வினை


*கர்ம வினை.*

ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது.

பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது.

அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார்.

அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.

கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பமாகிவிட்டது.

கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா?  கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை.  விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றம் இல்லை.  அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. அது அவனும் அறியாமல் நடந்த விஷயம்.

இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான்.

சித்திரகுப்தன் கூறியதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் அதுவரை பொறுமையாக இரு என அறிவுறுத்தினான்.

ஒரு சில நாட்கள் கழித்து அரசன் உதவி நாடிச் சென்ற சில அந்தணர்கள் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.

அப்பெண்மணியும் அவர்களுக்கு சரியான பாதையை  கூறியதோடு நில்லாமல்
 *இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன் சற்று எச்சரிக்கையாக இருங்கள்* என்றும் கூறினாள்.

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. *அந்தணரைக் கொன்ற  கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும்* என்று.

 *காரணம்*

 _மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருந்தாலும் அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி, பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்துவிடும்._

 *உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதும் சேரும்.*

 *எனவே, மற்றவர்கள் பற்றி பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.*

Tuesday, January 22, 2019

அர்த்த_சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்

#அவசியம்_படியுங்கள் #உங்களுக்கு_பயன்_தரலாம்.

அர்த்த_சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்.

ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன்
ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.


ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும்
போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும்
போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.


ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய
மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .


ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.


அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.


ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.


நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.


உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு
செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.


கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.


கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி
உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும்
பயனற்றது.


காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி
இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு,
நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.


பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.


பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம்
போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை
உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.


சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும்,
கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும்,
காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.


சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.


கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.


களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.


விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு
தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே
உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.


இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.


கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி
இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.


ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன்
எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.


அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.


ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும்
வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய
வேண்டும்.


யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.


எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்.
வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.


அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு
இடத்திற்க்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.


சிங்கத்திலன் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.


அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற
வித்தைகள் வீணாகும்.


வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை
இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும்
துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.


அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில்
பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.


கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.


எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல்
நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.


மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.


பாம்பு, அரசன் , புலி, கொட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின்
நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது


பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.


கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.


கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.


வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.


பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.


பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி
பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி
எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு
ஒருவரை எடை போடக்கூடாது.


வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை
விதமாக உரைத்தாலும் அறிவு வராது.


சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.


கல்வி கற்கும் மாணவன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க
வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம்,
அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.


உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம்.


 தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.


ஆயிரம் புதிய புத்தகம் கம்ப்யூட்டர் கற்று கொடுக்கலாம் . வாழ்க்கையை பழைய புத்தகம் தான் கற்று கொடுக்கும்