🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனிய நாள்! 🌷
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இதுதான் மிகப்பெரிய சாதனையின் ரகசியம். பலம் பலவற்றை தகர்த்து அழிக்கும். ஆனால், அன்பின் கண்ணுக்குத் தெரியாத பலம் பல இதயத்தின் கதவுகளை திறக்கும் சக்திவாய்ந்தது.
நான் அன்பை ஆயுதமாக்கிகொண்டால் அதை எந்த சக்தியாலும் எதிர்க்க முடியாது.
நான் சொல்லும் காரணங்கள் மறுக்கப்படலாம், என் பேச்சை நம்பாமல் போகலாம். என்னுடைய உடைகள் அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம், என் முகத்தை அவர்கள் வெறுக்கலாம். ஆனால், அன்பு எவர் மனதையும் உருகச் செய்யும், வெயிலில் பனி உருகுவதுபோல்.
🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனிய நாள். 🌷
🌺 ஆனால், இதை நான் எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறேன்?
இன்றிலிருந்து நான் ஒவ்வொன்றையும் நேசிப்பவனாகிறேன். என் உடலை வெதுவெதுப்பாக்கும் சூரியனை நேசிக்கிறேன்.
என் மனதை சாந்தப்படுத்தும் மழையை நான் விரும்புகிறேன். எனக்கு வழிகாட்டும் ஔியும் எனக்கு உகந்ததே; ஆனால் இருட்டும் எனக்குப்பிடிக்கும் ஏனென்றால் அப்போதுதானே நான் மினுக்கும் நட்சத்திரங்களை காணமுடியும்?
மகிழ்ச்சி என் மனதை விசாலப் படுத்துமானால், சோகம் என் ஆத்மாவை உணரச்செய்கிறது வெற்றிகள் எனக்குரியவை; தோல்விகள் எனக்கு சவால்.
🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனிய நாள். 🌷
நான் என் எதிரிகளின் நல்ல செயல்களை பாராட்டுவதால் நண்பர்களாக்கி கொள்வோன்.
பாராட்டுக்கு காரணங்களைத் தேடியபடி இருப்பேன்;
வீண் வம்புக்காக அலையமாட்டேன்.
நான் எவரையாயினும் குறைகூற நேர்ந்தால் நாக்கை கடித்துக்கொள்வேன்.
புகழ வேண்டுமா? கூரை மீது நின்று கூவிப் பாராட்டுவேன்.
பறவைகளும், காற்றும், கடலும் இயற்கையின் அழகையும், தன்னை படைத்தவனின் புகழையும் பாடியபடி இருக்கிறது. அதே குரலில் நானும் ஏன் கடவுளின் குழந்தைகளைப் பற்றிபாடக்கூடாது? இனி இந்த ரகசியம் என் வாழ்வின் போக்கையே மாற்றப்போகிறது.
🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனிய நாள்! 🌷
🌺 நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
ஒவ்வொரு மனிதனிடமும் பாராட்ட வேண்டிய குணங்கள் மறைந்து இருக்கிறது. அதனால், நான் அவர்களை நேசிக்கப்போகிறேன் அவர் மனதில் எழும் சந்தேகங்களையும், வெறுப்பையும் எடுத்தெறிந்து அன்பால் அவர்கள் இதயத்திற்கு ஒரு பாலம் அமைப்பேன்.
ஆவல் நிறைந்த மனிதர்கள் என்னை புத்துணர்வு கொள்ளச் செய்கின்றனர்; தோல்விகள் எனக்கு பாடங்களை போதிக்கின்றன.
வலிமையானவர்களை நேசிக்கும் நான் வலிமையற்றவர் களையும் அவர்களின் புனிதத்திற்காக நேசிக்கிறேன். பணம் படைத்தவர்கள் தனிமையானவர்கள்.
ஏழைகளோ ஏராளம். இருவருக்குமே என் அன்பு உண்டு. சிறியவர்களை அவர்களின் நம்பிக்கைக்கும், பெரியவர்களை அவர்களின் அனுபவத்திற்கும் மதிக்க வேண்டும். அழகானவர்களின் கண்களின் சேகம் தெரியும்; ஆனால், அழகற்றவர்களின் மனதின் புனிதம் புரியும்.
🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனியநாள்! 🌷
🌺 நான் மற்றவர்களின் நடவடிக்கைகளை எப்படி எதிர் கொள்ளப் போகிறேன்?
அன்பினால்,
அன்பே மனிதர்களின் இதயத்தை திறக்க வைக்கும் ஆயுதம்.
அதே அன்பு தான் என்னை வெறுப்பு என்னும் அம்புகளிலிருந்தும், கோபம் என்னும் ஈட்டியிலிருந்தும் பாதுகாக்கும் கவசமும், எதிர்ப்பையும், தைரியமிழக்க செய்யும் செயல்களையும் இந்த கேடயம் தடுத்து பலமிழக்க செய்து விடும்.
🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனியநாள்! 🌷
🌺 நான் ஒவ்வொருவரையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறேன்?
ஒரேவழிதான். நான் என் மனதில் சொல்லிக் கொள்ளப்போவது நான் உன்னை நேசிக்கிறேன் என்பதையே, என் விழிகள் அதை அவர்களுக்கு உணர்த்தும்; மொழியில் அவை எதிரொலிக்கும். புன்சிரிப்பில் அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனியநாள்! 🌷
எல்லாவற்றுக்கும் மேலாக என்னை நான் மிகவும் நேசிக்கிறேன்.
நான் செய்யும் ஒவ்வொரு செயலும் என் உடம்பால், மனதால், இதயத்தால், ஆத்மாவினால் பரிசீலிக்கப்பட்டது.
என் உடலின் வேட்கைகளுக்கு முதலிடம் தரமாட்டேன்; அதற்கு வேண்டியது சுத்தமும் அடக்கமும்.
மனதை தீயவையோ, வெறுப்போ தீண்டாமல் பாதுகாப்பேன் அதற்கு தேவை அறிவும் விவேகமும் என் ஆத்மாவை சோம்பி கிடக்க விடமாட்டேன். தியானமும் பிரார்த்தனையும் அதை உயர்த்தும். என் இதயத்திலிருந்து சின்னத்தனமோ கசப்போ இராது. அதை அன்பால் அரவணைத்து உலகிற்கு உபயோகப்படுத்துவேன்.
🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனியநாள்! 🌷
இன்றிலிருந்து நான் மானுடத்தை நேசிக்கப்போகிறேன்.
என்னிடமிருந்து வெறுப்பு முழுவதுமாக சென்று அன்பு முழுவதுமாக ஆக்கிரமிக்கும்.
🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனியநாள்! 🌷
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂