Wednesday, November 7, 2018

வெற்றி வார்த்தைகளுக்குள் இருக்கிறது... வெளியே தேடாதீர்கள்!


வெற்றி வார்த்தைகளுக்குள் இருக்கிறது... வெளியே தேடாதீர்கள்!

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


ஒரு அதிகாலை வேளையில், வெளியூர் செல்வதற்காக பஸ் நிலையம் நோக்கிச் சென்றார் கார்மேகம். பஸ்சைப் பிடிக்கும் அவசரத்தில் வேகமாகப் போய்க்கொண்டிருந்தார். அவர் செல்ல வேண்டிய பேருந்து இன்னும் அரை மணி நேரம் கழித்துதான் வரும் என்று சொல்லிவிட்டார்கள். பைக்குள் இருந்து மொபைல் போனை எடுத்துப் பார்த்தார். அப்போது முக்கியமான ஒரு செய்தியை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லாமல் வந்துவிட்டது நினைவுக்கு வந்தது. டயல் செய்தார். உங்கள் இருப்பில் போதுமான பேலன்ஸ் இல்லை' என்று ஒரு பெண்குரல் ஒலித்தது.சரி... வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பலாம் என்றால் அதற்கும் வழியில்லை. டேட்டாவும் காலியாகி விட்டது. அருகே ரீசார்ஜ் கடை எதுவும் இருக்கிறதா, என்று சுற்றும் முற்றும் பார்த்தார். ஒரெயொரு கடை இருந்தது. ஆனால், மூடிவைத்திருந்தார்கள்.
சிறிது தூரம் நடந்தார். அவர் கண்ணில் ஒரு ரெஸ்டாரன்ட் பட்டது. இங்கே வைஃபை இலவசம்' என்று எழுதப்பட்டிருந்தது. அவசரமாக, அந்தக் கடையை நோக்கிச் சென்றார். திடகாத்திரமான இளைஞன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவனிடம் சென்று, வைஃபை பாஸ்வேர்டை கேட்டார் கார்மேகம். அவன் மிகவும் பணிவுடன், டேக் ஃபுட் பர்ஸ்ட்' என்றான்.அந்தக் கடையில் பஃபே சிஸ்டம்' என்பதால், பர்ஸில் இருந்த காசை எடுத்துக் கொடுத்துவிட்டு,
விருப்பமான உணவை எடுத்துக்கொண்ட கார்மேகம், ஒரு இருக்கையைத் தேர்வு செய்து அமர்ந்தார். சாப்பிட்டு முடித்துவிட்டு,அந்த இளைஞனைத் தேடினார். ஆனால், அங்கே அவன் இல்லை.அவன் நின்ற இடத்தில் ஓர் இளம்பெண் நின்றுகொண்டிருந்தார். கார்மேகம், அந்தப்பெண்ணிடம், இங்கே இருந்த இளைஞன் எங்கே?' என்று கேட்டார். அவர் டூட்டி முடிந்துபோய்விட்டார்' என்று அழகான குரலில் அந்தப் பெண் பதில் சொன்னார். சரி... சரி, வைஃபை பாஸ்வேர்டைச் சொல்லுங்க' என்று கேட்டார் கார்மேகம்.டேக் ஃபுட் ஃபர்ஸ்ட்' என்று மெல்லிய குரலில் சொன்னார், அந்தப் பெண். உடனே அவர், அந்தப் பெண்ணை முறைத்துப் பார்த்துவிட்டு,மறுபடியும் போய் பணம் செலுத்திவிட்டு,இப்போது காபி வாங்கி வந்தார். அந்தப் பெண் இருக்கும் திசையை நோக்கிப் பார்த்தபடியே காபி அருந்திக் கொண்டிருந்தார்.
வேகவேகமாகக் குடித்து முடித்ததும் பேப்பர் கப்பைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அந்தப் பெண்ணைத் தேடினார். அங்கே அவரைக் காணவில்லை. வேறொரு வாடிக்கையாளரைப்
பார்க்கப் போய்விட்டாள்!இப்போது, கார்மேகத்துக்குக் கோபம் தலைக்கேறியது. தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார். பேருந்துக்கான நேரம் நெருங்கிக்
கொண்டிருந்தது. அவசரமாக ரெஸ்டாரன்ட் மேனேஜர் எங்கே?' என்று கேட்டு, அவரது இடத்துக்குச் சென்றார். அவர் கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்தார். வாட்ட சாட்டமான உடல்வாகு கொண்ட அவரிடம் கார்மேகம், நீங்களாவது வைஃபை பாஸ்வேர்டைச் சொல்லுங்கள்' என்று கெஞ்சும்குரலில்கேட்டார்.அவர் டேக் ஃபுட் பர்ஸ்ட்' என்றார்.
கார்மேகத்துக்குத் தலை கிறுகிறுத்து விட்டது. மேனேஜரைப் பார்க்கவே பயமாக இருந்ததால், அவரிடம் எதுக்கு வம்பு என்று நினைத்து மறுபடியும் பணத்தைக்கொடுத்து, தனக்கு விருப்பமான சாக்லெட் ஒன்றை எடுத்துக்கொண்டு நேராக மேனேஜரிடமே வந்து நின்றார்.இதோ பாருங்கள். உங்கள் கண்முன்னாலேயே சாப்பிடுகிறேன்... சாப்பிட்டு, முடித்தவுடனாவது பாஸ்வேர்டைச் சொல்லுங்கள்' என்றவாறே, ஒரே மூச்சில் சாப்பிட்டுவிட்டு ஐயா... அவசரம்... எனக்கு வைஃபை பாஸ்வேர்டைச் சொல்ல முடியுமா?' என்று கேட்டார்.மேனேஜர் அவரை உற்றுப் பார்த்துவிட்டு,டேக் ஃபுட் பர்ஸ்ட்' என்று சத்தமாகச் சொன்னார். உடனே பதிலுக்கு கார்மேகமும். `அதான்... ஒண்ணுக்கு மூணு முறை சாப்பிட்டுவிட்டேனே. மறுபடியும் நான் போய் சாப்பிட வேண்டுமா?' எனக் கத்தினார். மேனேஜருக்குப் புரிந்துவிட்டது. அப்போது கார்மேகத்துக்குஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே ஒரு பலகையில் போல்டாக ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார்கள்.
வைஃபை பாஸ்வேர்டு: டேக் ஃபுட் ஃபர்ஸ்ட்!

நீதி: ஒருவர் பேசுவதில் ஒரே அர்த்தம்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அதில் மற்றொரு அர்த்தமும் ஒளிந்திருக்கலாம். அதைக் புரிந்துகொள்பவரே வெற்றியடைகிறார்!

நன்றி!

🌹🌹🙏🙏🌹🌹

No comments:

Post a Comment