Wednesday, November 7, 2018

நம்பிக்கை எந்தத் திசையிலிருந்தும் வரலாம்... ஜன்னலைத் திறந்து வையுங்கள்


நம்பிக்கை எந்தத் திசையிலிருந்தும் வரலாம்... ஜன்னலைத் திறந்து வையுங்கள்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

அது மக்கள் அதிகம் வசிக்கும் ஒரு நகரம். அங்கே நிறைய கடைகள் இருந்தன. அது தீபாவளி சீஸன். ஆனால், கடைத்தெருவில் மனித நடமாட்டமே இல்லை. சாலை வெறிச்சோடிக் கிடந்தது. எல்லா வியாபாரிகளுமே காரணம் தெரியாமல் விழித்துக்
கொண்டிருந்தனர். ஜவுளி வியாபாரி ஒருவர், 'ஏதாவது ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய கடைக்குள் நுழைந்துவிட மாட்டாரா' என்று சாலையில் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, வெள்ளை நிறத்தில் நவீன ரக கார் ஒன்று, அவரது வாசலில் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி வெள்ளை உடையில் கம்பீரமாக ஒரு செல்வந்தர் அவரை நோக்கி வந்தார். கையில், நவீன ரக செல்போன்கள் ஒன்றுக்கு இரண்டு வைத்திருந்தார்.
தீர்க்கமான பார்வை. அவரைப் பார்த்தவுடன் ஜவுளி வியாபாரி தானாகவே எழுந்து நின்றுவிட்டார்.
ஜவுளிக் கடைக்காரரின் முகக் குறிப்பை புரிந்துகொண்ட செல்வந்தர்,
எங்க வீட்டுத் திருமணத்துக்கு நிறையத் துணிமணிகள் வாங்க வேண்டும்... அதற்கான ஸ்டாக் இருக்கிறதா?’ என்று கேட்டார். 'பல்க்கான ஆர்டர் வரும்போல இருக்கிறது' என்று வியாபாரி மனசுக்குள் மகிழ்ந்தார்.
 உங்கள் தேவை என்னவோ அதைப் பூர்த்திசெய்கிறேன்’ என்றார். அப்படியென்றால், எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்...
உங்கள் வீட்டுப் பெண்ணுக்கு திருமணம் நடத்தினால், எப்படியெல்லாம் ஜவுளி எடுப்பீர்களோ...
அதுபோலவே எடுங்கள். எதிலும் குறையிருக்க வேண்டாம். எவ்வளவு பணமானாலும் செலுத்திவிடுகிறேன். சரி, அட்வான்ஸ் எவ்வளவு வேண்டும்?’ என்று கேட்டார்.கடைக்காரர், இப்போது வேண்டாம் ஐயா.. மொத்தமாக வாங்கிக்கொள்கிறேன்’ என்றார் பணிவுடன். சரி, எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?’ என்று கேட்டார் செல்வந்தர். சொல்லுங்கள்...
செய்கிறேன்’ என்றார். தரமான நகைகள் வாங்க வேண்டும்... உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டார். இருக்கிறார்கள்... இதோ உங்களுக்கு உதவ ஒருவரை உடன் அனுப்பிவைக்கிறேன்’ என்றார் வியாபாரி. தன்னுடைய ஊழியர்களில் ஒருவரை அனுப்பி, அவர் வேண்டுகிற எல்லாவற்றையும் செய்துகொடுக்குமாறும் பணித்தார். அந்த நவீன கார் ஒரு பெரிய ஜுவல்லரியின் வாசலில்போய் நின்றது. இருவரும் கடைக்குள் நுழைந்தனர்.ஜவுளிக் கடை ஊழியர் எல்லாவற்றையும் நகைக் கடை முதலாளியிடம் சொல்லிவிட்டு, செல்வந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றுவிட்டார்.நகைக்கடைக்காரர், உங்களுக்கு எந்த மாதிரியான டிசைனில் நகைகள் வேண்டும்?’ என்று செல்வந்தரிடம் கேட்டார். உங்கள் வீட்டுப் பெண்ணுக்கு திருமணம் நடத்தினால் எப்படியெல்லாம் அலங்கரிப்பீர்களோ அப்படியான நகைகள் வேண்டும்’ என்று சொன்னதோடு, அது சரி...
உங்களுக்கு எவ்வளவு முன்பணம் வேண்டும்?’ என்று கேட்டார் செல்வந்தர். நெருங்கிய நண்பர் அனுப்பியிருக்கிறார்... முன்கூட்டியே பணம் வாங்குவதில்லை. எல்லாம் தயாரான உடன் பணம் கொடுத்தால் போதும்’ என்றார் முதலாளி பவ்யமாக!`சரி, அப்படியென்றால் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?’ என்று செல்வந்தர் கேட்டார். அவர் கேட்ட உதவியை ஒரு போன்காலிலேயே செய்து முடித்தார் நகைக்கடை முதலாளி. பிறகு, அவரிடம் விடைபெற்றுக்கொண்டு செல்வந்தர் கிளம்பிவிட்டார். அவர் போனபின்தான் அவருடைய முகவரியை வாங்கிக்கொள்ள மறந்தது, முதலாளிக்கு நினைவுக்கு வந்தது. 'சரி, நண்பரிடம் இருக்கும், கேட்டு வாங்கிக் கொள்ளலாம்' என்று விட்டுவிட்டார்.திடீரென்று பெரிய ஆர்டர்கள் வந்ததில் ஜவுளி வியாபாரியும் நகைக்கடை முதலாளியும் திக்குமுக்காடிப்போனார்கள். உடனே, நாலாப் பக்கமும் தங்களுக்குத் தேவையான பொருள்களை ஆர்டர் செய்ய ஆரம்பித்தார்கள். ஆர்டர் எடுத்தவர்கள் அதை முடித்துக் கொடுக்க தீவிரமாக வேலை செய்தார்கள். இதனால், அந்தப் பகுதியில் இருந்த வணிகக் கடைகள் எல்லாவற்றிலும் பொருட்களை இறக்குவதும் ஏற்றுவதுமாக பிஸியாக இருந்தார்கள். இதனால், அந்தப் பக்கமாக சென்ற மக்கள், வாகனநெருக்கடியில் சிக்கி சிறிதுநேரம் நின்று செல்ல வேண்டியிருந்தது. நின்றிருந்தவர்கள் கடைகளில் உள்ள புதிய பொருள்களைப் பார்த்து மயங்கினார்கள். கூட்டத்தைப் பார்த்து திகைத்தார்கள். 'தீபாவளிக்கு முன்பே பொருள்களை வாங்கிவிட வேண்டும்' என்று நினைத்தார்கள். ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு கடைகளுக்குள் புகுந்து, தங்களுக்குத் தேவையான பொருள்களை அள்ளிச் சென்றார்கள். இப்படி திடீரென அளவுக்கதிகமான கூட்டம் கூடியதால், அந்தப் பகுதியே பரபரப்பாகிவிட்டது
ஜவுளிக் கடையிலும் நகைக்கடையிலும் குண்டூசி நுழையும் அளவுக்குக்கூட இடமில்லாமல் கடையில் கூட்டம். போட்டிபோட்டுக்கொண்டு மக்கள் பொருள்களை வாங்கிக்
கொண்டிருந்தனர். இந்தக் களேபரத்தில் வியாபாரிகள் இருவரும் செல்வந்தரை மறந்தே போனார்கள்.விடிந்தால், தீபாவளி.
ஆனால், பதினோரு மணி ஆகியும் கட்டுக்குள் அடங்காத வாடிக்கையாளர்களால் திணறிப்போனார் ஜவுளி வியாபாரி. இரு வாரங்களுக்கு முன்னர்ஒரு செல்வந்தர் திருமணத்துக்கான ~ Siva Prakash ~:
ஜவுளிகள் கேட்டிருந்தது அப்போதுதான் அவருக்கு நினைவில் வந்தது. அவர் அவசரமாக, கடையின் சூப்பர்வைசரை அழைத்து,
 செல்வந்தர் கேட்ட ஜவுளிகள் எல்லாம் ரெடியாக இருக்கிறதா...?’
என்று கேட்டார். அவருக்குத் தயார் செய்த அனைத்து ஜவுளிகளையும் மக்களே வாங்கிப்
போய்விட்டார்கள். மறுபடியும் ஆர்டர் செய்ய வேண்டும்’ என்று, தலையைச் சொறிந்துகொண்டே பதில் சொன்னார் ஊழியர். அப்போதுதான் அவருக்கு மற்றொன்றும் ஞாபகத்துக்கு வந்தது. அவரிடம் முகவரி வாங்கிக்கொள்ள மறந்தது. உடனடியாக நகைக்கடை முதலாளிக்குப் போன் போட்டார். எதிர்முனையில், உங்களிடம் இருக்கும் என்று நானும் வாங்கவில்லை’ என்று பதில் வந்தது.தீபாவளி கடந்து மூன்று மாதங்களாகியும் அந்தச் செல்வந்தர் திரும்பி கடைக்கு வரவேயில்லை. ஆனால், அந்தப் பகுதி எப்போதும் மக்கள் திரள் கொண்ட ஏரியாவாக மாறிவிட்டிருந்தது. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அலை அலையாக வந்துகொண்டே இருந்ததால் அந்த செல்வந்தரை தேடும் முயற்சியை இருவரும் கைவிட்டுவிட்டனர். ஒருவேளை வந்திருந்தது கடவுளாக’ இருக்குமோ?

நீதி: நம்பிக்கை எந்தத் திசையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வரலாம். நம்முடைய ஜன்னலைத் திறந்து வைத்திருப்பதே அவசியம்!

நன்றி!

🌹🌹🙏🙏🌹🌹

No comments:

Post a Comment