Wednesday, November 7, 2018

தனது துன்பத்திற்கு காரணம் யார்?

~ Arul Prakash ~:
தனது துன்பத்திற்கு காரணம் யார்?"

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

"சிலர் தனது செயலால் துன்பம் விளையவில்லை. தனது துன்பத்திற்குக் காரணம் பிறரே என எண்ணுகின்றனர் ! எவரும், எவருக்கும் எத்தகைய கெடுதலும் தனது விருப்பம் போல் செய்துவிட முடியாது. தனக்கு வரக்கூடிய இன்பமோ, துன்பமோ, லாபமோ, நட்டமோ, புகழோ, இகழோ, வரவோ, செலவோ, தன்னுடைய செயலிலேயிருந்துதான் பிறக்க முடியுமே தவிர வேறு எங்கிருந்தும் வராது.
ஒவ்வொருவரிடமும்
வினைப்பதிவுகள்
(sins and imprints) உள்ளன.
அப்பதிவுகளை வெளியாக்கித் தூய்மைப்படுத்த வேண்டியது இயற்கையின் நியதி
 (Law of Nature).
அதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதை யாரலும் மாற்ற முடியாது இது இயற்கையின் சட்டம்.
முன்பு செய்த வினைக்கான பலன் இன்று கசப்பாக இருந்தாலும். அந்த விதையை எண்ணங்களால், உணர்வுகளால், வார்த்தைகளால், செயல்களால் நாம் பிரபஞ்சத்தில் கடந்தகாலத்தில் பதிவு செய்ததின் விளைவுகளை தான் நாம் இன்று அனுபவிக்கிறோம்.
பலர் இதை மாற்ற நினைக்கின்றனர்.
சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானத்தில் ஏறிவிட்டு திடிரென செல்ல வேண்டிய இடம் மதுரை அல்ல கோவை என நாம் உணர்ந்தால் கூட நம்மால் அதை மாற்ற முடியாது அது போல் தான் வினையின் பலனும்.
விதைப்பதற்கு முன்பே வினை செய்வதற்கு முன்பே அதன் இறுதி விளைவு நன்மை கொடுக்கும் என உங்கள் மனசாட்சி சொன்னால் அந்த வினையை செயலை செய்யுங்கள்.
அதைவிட்டு பேராசையால் அல்லது ஆணவத்தால் அல்லது நம்மால் எதையும் செய்ய முடியும் என்ற கர்வத்தால் சில செயல்களை செய்து விட்டு பிறகு அதன் பலன் வரும் போது அதை ஏற்க மறுத்தால் நாம் அதிலிருந்து விடுபட முடியுமா? நாம் நம் அறிவை பயன்படுத்தி எவ்வளவு முயற்சி செய்தாலும் வினைபயனை பொறுத்துதான் பலன் அமையும்.
எவ்வளவு தான்
ஒருவருக்கு தீவிர சிகிச்சையளிக்கும் போதும் பெரிய மருத்துவமனையில் பெரிய பெரிய மருத்துவர்கள் கூட கடைசியில் சொல்லும் வார்த்தை இதுதான் நாங்கள் முயற்சிகிறோம் ஆனால் இறைவன் கையில் தான் இருக்கிறது என்பார்கள்!
அவ்வளவு தான் சில நேரங்களில் நம் அறிவை கொண்டு முயற்சிக்கலாம்.
ஆனால் முடிவு இறைவன் அல்லது இயற்கையின் கையில் உள்ளது.

இந்த இறைவன் இந்த இயற்கை என்ற வார்த்தையின் உள்ளார்ந்த அர்த்தம் நாம் முன்பு கடந்தகாலத்தில் செய்த வினைபயன் தான்.
அதை நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் இது இயற்கையின் நியதி.

பொறியியல் படித்து விட்டு மருத்துராக முடியாது.

மருத்துவம் படித்துவிட்டு பொறியியல் வல்லுனர் ஆக முடியாது.

நாம் முன்பே தேர்வு செய்ய வேண்டும்.
நம் சரியான இலக்கை
சரியான செயல்களை
நாம் தான் தேர்வு செய்ய வேண்டும்.
நாம் தவறான இலக்கை தேர்வு செய்து தவறான செயல்களை செய்து விட்டு இறுதி விளைவு மட்டும் சரியாக இருக்க வேண்டும் என ஆசைபடுவது எப்படி சரியாகும்.
பணத்தை வைத்து அதிகாரத்தை வைத்து ஆள் பலத்தை செல்வாக்கை வைத்து தவறான செயல்களை செய்வது மிக எளிது ஆனால் அதன் விளைவு ஏதோ ஒரு வழியில் நம் முன் வந்து நிற்கும்.

அவர்கள் செல்வாக்கான நபர்களாக இருந்து அவர்கள் மரணம் எப்படி அமைந்தது அலெக்ஸாண்டர் நெப்போலியன் முதல்
ஹிட்லர் ஏன் நம் அரசியல் தலைவர்கள் வரை பல உதாரணங்கள் நமக்கு வெளிப்படையாக தெரியுமே அவர்கள் திடிர் மரணம் அல்லது மிக துன்பமான இறுதிக்காலம் இது அனைத்தும் கர்மவினைதான் என்ன பணம் அதிகாரம் செல்வாக்கு சிலவற்றை மறைக்கலாம்.
ஆனால் பலன் என்பது பொதுவான
இயற்கை சட்டம் விதிவிலக்கு யாருக்குமில்லை நல்லவனோ, கெட்டவனோ
விதி ஒன்றுதான்.
இதை உணர்ந்து நாம் முந்தைய கர்மவினையின் பலனை மனதார ஏற்றுகொண்டால் நம் பிரச்சனைகள் அது என்ன மாதரி பிரச்சனை என்றாலும் விரைவில் சரியாகிவிடும்.
பிறகு இனி இந்த நிகழ்காலத்தில் கர்மவினையின் தாக்கம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் யாருடனும் சண்டையிடாமல் கர்ம நியதியை சிற்றறிவினால் மாற்ற முயற்சிக்காமல்.
அதை முழுமனதுடன் ஏற்று இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த பொன்னான நிகழ்காலத்தில் நாம் என்ன எண்ணத்தை, என்ன உணர்வுகளை, என்ன வார்த்தைகளை, என்ன செயல்களை விதைக்கிறோம் என்பதில் கவனம் செலுத்தி மிகுந்த எச்சரிக்கையாக மிகுந்த விழிப்புணர்வுடன்.
சரியான விதைகளை விதைத்தால், வினைகளை செய்தால் இனிவரும் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
நம் எதிர்கால விதியை கட்டுப்படுத்தும் அதிகாரம் சக்தி நமக்கு கொடுக்கப்
பட்டிருக்கறது.
ஆனால் கடந்தகால வினை பயனை கட்டுபடுத்தும் அதிகாரம் சக்தி கொடுக்கப்
படவில்லை.
இதை உணர்ந்து நாம் எதிர்காலத்தில் நமக்கு வேண்டத்தகாத விளைவுகள் விரும்பத்தகாத எதிர்மறை விளைவுகள் வேண்டாமென்றால் கடந்த கால வினைபயனை முழுமையாக ஏற்று அனுப்பவித்தால் தான் நமக்கு சரியான எதிர்காலத்தை வடிவமைக்கத் தேவையான அனுபவ அறிவும் பக்குவமும் வரும்.

நன்றி!

வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்!

🙏🙏🌹🌹🙏🙏

No comments:

Post a Comment