Thursday, November 22, 2018

இனிய நாள்


🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனிய நாள்! 🌷

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

இதுதான் மிகப்பெரிய சாதனையின் ரகசியம். பலம் பலவற்றை தகர்த்து அழிக்கும். ஆனால், அன்பின் கண்ணுக்குத் தெரியாத பலம் பல இதயத்தின் கதவுகளை திறக்கும் சக்திவாய்ந்தது.
நான் அன்பை ஆயுதமாக்கிகொண்டால் அதை எந்த சக்தியாலும் எதிர்க்க முடியாது.

நான் சொல்லும் காரணங்கள் மறுக்கப்படலாம், என் பேச்சை நம்பாமல் போகலாம். என்னுடைய உடைகள் அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம், என் முகத்தை அவர்கள் வெறுக்கலாம். ஆனால், அன்பு எவர் மனதையும் உருகச் செய்யும், வெயிலில் பனி உருகுவதுபோல்.

🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனிய நாள். 🌷


🌺 ஆனால், இதை நான் எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறேன்?

இன்றிலிருந்து நான் ஒவ்வொன்றையும் நேசிப்பவனாகிறேன். என் உடலை வெதுவெதுப்பாக்கும் சூரியனை நேசிக்கிறேன்.
என் மனதை சாந்தப்படுத்தும் மழையை நான் விரும்புகிறேன். எனக்கு வழிகாட்டும் ஔியும் எனக்கு உகந்ததே; ஆனால் இருட்டும் எனக்குப்பிடிக்கும் ஏனென்றால் அப்போதுதானே நான் மினுக்கும் நட்சத்திரங்களை காணமுடியும்?
மகிழ்ச்சி என் மனதை விசாலப் படுத்துமானால், சோகம்  என் ஆத்மாவை உணரச்செய்கிறது வெற்றிகள் எனக்குரியவை; தோல்விகள் எனக்கு சவால்.

🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனிய நாள். 🌷

நான் என் எதிரிகளின் நல்ல செயல்களை பாராட்டுவதால் நண்பர்களாக்கி கொள்வோன்.
பாராட்டுக்கு காரணங்களைத் தேடியபடி இருப்பேன்;
வீண் வம்புக்காக அலையமாட்டேன்.
நான் எவரையாயினும் குறைகூற நேர்ந்தால் நாக்கை கடித்துக்கொள்வேன்.
புகழ வேண்டுமா? கூரை மீது நின்று கூவிப் பாராட்டுவேன்.

பறவைகளும், காற்றும், கடலும் இயற்கையின் அழகையும், தன்னை படைத்தவனின் புகழையும் பாடியபடி இருக்கிறது. அதே குரலில் நானும் ஏன் கடவுளின் குழந்தைகளைப் பற்றிபாடக்கூடாது? இனி இந்த ரகசியம் என் வாழ்வின் போக்கையே மாற்றப்போகிறது.

🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனிய நாள்! 🌷

🌺 நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

ஒவ்வொரு மனிதனிடமும் பாராட்ட வேண்டிய குணங்கள் மறைந்து இருக்கிறது. அதனால், நான் அவர்களை நேசிக்கப்போகிறேன் அவர் மனதில் எழும் சந்தேகங்களையும், வெறுப்பையும் எடுத்தெறிந்து அன்பால் அவர்கள் இதயத்திற்கு ஒரு பாலம் அமைப்பேன்.

ஆவல் நிறைந்த மனிதர்கள் என்னை புத்துணர்வு கொள்ளச் செய்கின்றனர்; தோல்விகள் எனக்கு பாடங்களை போதிக்கின்றன.
வலிமையானவர்களை நேசிக்கும் நான் வலிமையற்றவர் களையும்  அவர்களின் புனிதத்திற்காக நேசிக்கிறேன். பணம் படைத்தவர்கள் தனிமையானவர்கள்.
ஏழைகளோ ஏராளம். இருவருக்குமே என் அன்பு உண்டு. சிறியவர்களை அவர்களின் நம்பிக்கைக்கும், பெரியவர்களை அவர்களின் அனுபவத்திற்கும் மதிக்க வேண்டும். அழகானவர்களின் கண்களின் சேகம் தெரியும்; ஆனால், அழகற்றவர்களின் மனதின் புனிதம் புரியும்.

🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனியநாள்! 🌷

🌺 நான் மற்றவர்களின் நடவடிக்கைகளை எப்படி எதிர் கொள்ளப் போகிறேன்?

அன்பினால்,
அன்பே மனிதர்களின் இதயத்தை திறக்க வைக்கும் ஆயுதம்.
அதே அன்பு தான் என்னை வெறுப்பு என்னும் அம்புகளிலிருந்தும், கோபம் என்னும் ஈட்டியிலிருந்தும் பாதுகாக்கும் கவசமும், எதிர்ப்பையும், தைரியமிழக்க செய்யும் செயல்களையும் இந்த கேடயம் தடுத்து பலமிழக்க செய்து விடும்.

🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனியநாள்! 🌷

🌺 நான் ஒவ்வொருவரையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறேன்?

ஒரேவழிதான். நான் என் மனதில் சொல்லிக் கொள்ளப்போவது நான் உன்னை நேசிக்கிறேன் என்பதையே, என் விழிகள் அதை அவர்களுக்கு உணர்த்தும்; மொழியில் அவை எதிரொலிக்கும். புன்சிரிப்பில் அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனியநாள்! 🌷

எல்லாவற்றுக்கும் மேலாக என்னை நான் மிகவும் நேசிக்கிறேன்.
நான் செய்யும் ஒவ்வொரு செயலும் என் உடம்பால், மனதால், இதயத்தால், ஆத்மாவினால் பரிசீலிக்கப்பட்டது.
என் உடலின் வேட்கைகளுக்கு முதலிடம் தரமாட்டேன்; அதற்கு வேண்டியது சுத்தமும் அடக்கமும்.
மனதை தீயவையோ, வெறுப்போ தீண்டாமல் பாதுகாப்பேன் அதற்கு தேவை அறிவும் விவேகமும் என் ஆத்மாவை சோம்பி கிடக்க விடமாட்டேன். தியானமும் பிரார்த்தனையும் அதை உயர்த்தும். என் இதயத்திலிருந்து சின்னத்தனமோ கசப்போ இராது. அதை அன்பால் அரவணைத்து உலகிற்கு உபயோகப்படுத்துவேன்.

🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனியநாள்! 🌷

இன்றிலிருந்து நான் மானுடத்தை நேசிக்கப்போகிறேன்.
என்னிடமிருந்து வெறுப்பு முழுவதுமாக சென்று அன்பு முழுவதுமாக ஆக்கிரமிக்கும்.

🌷 இந்த நாள் அன்பால் நிறைந்த இனியநாள்! 🌷

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

Wednesday, November 7, 2018

உண்மையான நீதி

~ Arul Prakash ~:
இந்தோனிஷியாவில் நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான
வழக்கொன்றை சந்தித்தது.........

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹









வயதான பெண்மணியொருவர்,தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார்.
வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார்........"நான் களவாடியது உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால் வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார்.இதை கேட்டதும் நீதிபதி........."என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது.எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாயா (100 அமெரிக்க டொலர்) அபராதமாக விதிக்கின்றேன்.இதை கட்ட தவறினால் இரண்டரை வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்."இவ்வாறு தீர்ப்பளித்துவிட்டு, தன்னுடைய நீதிபதி தொப்பியை கழற்றி அங்கு குழுமியிருந்த மக்களை பார்த்து......"இங்குள்ள ஒவ்வொருவர்மீதும் நான் ஐம்பதுனாயிரம்ருபாயா (5 டொலர் ஐம்பது காசு) தண்டணையாக இடுகின்றேன்.காரணம் !!!! இந்த நகரத்தில் ஒரு சிறு குழந்தை உணவின்றி பட்டினியால் வாடுவதற்கும், அதன் காரணமாக குழந்தையின் பாட்டி தவறான செயலை செய்யும் சூழலை உருவாக்கியதற்காகவும், உங்களுக்கு இத்தண்டணையை அளிக்கின்றேன்."என்று உத்தரவிட்டு நீதிமன்ற உதவியாளர் மூலமாக, அங்குள்ள அனைவரிடமும் தண்டணைப் பணத்தை வசூலித்தார். இதில் தோட்டத்தின் பொறுப்பாளரும் அடங்குவார்.இவ்வாறு சேர்ந்த 35 இலட்சம் ருபாயாவிலிருந்து (350 அமெரிக்க டாலர் ) 10 இலட்சம் ருபாயாவை நீதிமன்றத்திற்கு அளித்துவிட்டு, அம்மூதாட்டியை தண்டணையிலிருந்து விடுவித்து, மிகுதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, அவரது கஷ்டத்திற்கு பயன்படுத்தும்படி கூறி, அங்கிருந்து எழுந்து சென்றார்.!!!!!!! சட்டம், மனிதாபிமானம், நீதி ஒன்றுக்கொன்று கைகோா்த்து தர்மத்தை நிலைக்கவைத்துவிட்டன !நீதிபதி என்றால் இவர்போல சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் ஒருங்கே கையாள வேண்டும்.
முன்னுதாரணமான இந்த நீதிபதிக்கு வாழ்த்துக்கள்.

நன்றி!

🌹🌹🙏🙏🌹🌹

அன்பும் அக்கறையும்

~ Arul Prakash ~:
😍அன்பும் 😍
😍அக்கறையும்😍

கடவுள் அல்லது இந்த பிரபஞ்ச பேரறிவு நமக்கு சில சமயங்களில் சில கடினமான துன்பங்களை கொடுப்பதும் அல்லது சில விஷயங்கள் கிடைக்காமல் தடுப்பதும்.
(காதல் தோல்வி,
சில ஏமாற்றங்கள்
சில தடைகள் ஏற்படுவதை நாம் எப்பொழுதும் எதிர்மறையாக நினைக்கிறோம்.
எனவே அதை ஏற்காமல் இறைசக்தியை அல்லது விதியை குறை சொல்கிறோம்.
அல்லது சிற்றறிவை பயன்படுத்தி நம் அதிகாரபலத்தை பயன்படுத்தி கடவுளோ பிரபஞ்ச பேரறிவோ நமக்கு வேண்டாம் என தடுக்கும் விஷயங்களை நாம் வலுக்கட்டாயமாக அநியாயமாக இயற்க்கைக்கு எதிராக அடைய நினைக்கிறோம்.
ஆனால் அதில் இருக்கும் பேராபத்து நம் சிற்றறிவுக்கு எட்டுவதில்லை.


நாம் விரும்பியது கிடைக்கும் என்பது
ஈர்ப்பு விதி!
ஆனால் நாம் தவறானதை விரும்பும் போது அல்லது நமக்கு ஒத்துவராத ஒரு நபரை நம் வாழ்க்கை துணையாக ஈர்க்க ஆசைபடும் பொழுது இறைசக்தி நம்மீதுள்ள அக்கரையால் அதை தடுத்து நமக்கு நம் குணத்திற்கேற்ற சிறப்பான வாழ்க்கை துணையை கொடுப்பதற்காக இந்த காதல் அல்லது திருமண ஏற்பாட்டை கூட தடை செய்யலாம். நாம் ஏன் நாம் ஆசைபட்டது விரும்பியது கிடைக்கவில்லை என சிலசமயம் வாழ்க்கையை நொந்து கொள்கிறோம்.
பலமுடையவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி வன்முறையை பயன்படுத்தி சிலவற்றை வலுக்கட்டாயமாக அடைய நினைக்கிறார்கள் அதன் விளைவு இறுதியில் மோசமாக அமைந்துவிடுகிறது பிறகு வருந்தியும் பயனில்லை.

நாம் சிற்றறிவு

பிரபஞ்சம் பேரறிவு

சில சமயம் நாம் விரும்பிய ஆசைபட்ட சில விஷயங்கள் நமக்கு கிடைக்காதது நம் நன்மைக்காகத்தான்!
இது நம் சிற்றறிவிலிருந்து பார்த்தால் சாபமாக தெரியும்.
பேரறிவின் துணை கொண்டு பார்த்தால் வரமாக ஆசீர்வாதமாகத்
தெரியும்.

இதை புரிந்து கொள்வதுதான் வாழ்வின் மிகப்பெரிய ரகசியம்.

இந்த பெருண்மையை விளக்கும் ஒரு பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது

நான்
கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா?

கடவுள் : தாரளமாக
கேள்

நான் : பொறுமையா கோபப்படாமல் பதில் சொல்வீர்களா?

கடவுள் : சத்தியமாக!

நான் : இன்னைக்கு ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளை கொடுத்தீங்க?

கடவுள் : என்னப்பா சொல்லுற நீ?

நான் : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட்

கடவுள் : ஆமாம்! அவசரத்துல என்னை கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டாய்.

நான் : கிளம்பினதே லேட் இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது.

கடவுள் : ஆமாம் எனக்கு தெரியும்.

நான் : சரி! பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல ஒரே டிராஃபிக்ஜாம். ஆபீஸ்க்கு ஒரு மணிநேரம் லேட்.

கடவுள் : ஆமாம்! தெரியும்.

நான் : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆகிடிச்சு அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிடுச்சு கடைசீயில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.

கடவுள் : ஆமாம் அதுவும் தெரியும்.

நான் : வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர் கிட்டே ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர் கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.

கடவுள் : ஆமாம் தெரியும்.

நான் : அதை பிடிச்சி! இதை பிடிச்சி! முட்டி மோதி வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் ஆகி வேலை செய்யலஇன்னைக்கு எனக்கு எதுவுமே சரியில்லையே ஒரு நாள் உங்களை கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா?(கடவுள் பலமாக சிரிக்கிறார்.

சில வினாடிகள் கழித்து! பேச ஆரம்பிக்கிறார்)

கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின் படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும்
போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன்.

நான் : (அதிர்ச்சியுடன்)ஓ

கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன்.
ஏன்னா! நீ ஆபீஸ் போகும்போது நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகிதான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்.

நான் : (அடக்கத்துடன்) ஓ

கடவுள் : மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம் கடைசீயா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு!யாரும் அதை கவனிக்கல அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாகியிருக்கும்?

நான் : (கண்கலங்கியபடி)ம்ம்

கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்கு காரணம்! அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி உன் ஃபோனை செயலிழக்கச் செய்துவிட்டேன்.

நான் : ம்ம்

கடவுள் : அப்புறம்

~ Arul Prakash ~:
அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது.

ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு
ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிச்சை தொட்டிருந்தால் அந்த கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய், ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன்.
என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை.

நான் : இப்போ புரிகிறது இறைவா! என் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பும் அக்கறையும். இது புரியாமல் உங்களை ரொம்பவும் நிந்தித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.

கடவுள் : மன்னிப்பு கேட்காதே! என்னை நம்பு, எப்போதும் எந்த சூழ்நிலையிலும்.அது போதும்!

நான் : நிச்சயமாக

கடவுள் : நீ திட்டமிடுவதை விட உனக்காக நான்திட்டமிடுவது எப்போதும் சரியாகவே இருக்கும்.

நான் : இனி நிச்சயம் உங்களை சந்தேகப்படமாட்டேன். உங்கள் அருளை சந்தேகப்படமட்டேன். கண்ணை இமை காப்பது போல ஒவ்வொரு கணமும் நீங்கள் என்னை காப்பதைபுரிந்து
கொண்டேன்.

கடவுள் : என்னை நம்பியிருப்பவர்களை நான் என்றும் கைவிடுவதில்லை!!!

நன்றி!

🌹🌹🙏🙏🌹🌹

தனது துன்பத்திற்கு காரணம் யார்?

~ Arul Prakash ~:
தனது துன்பத்திற்கு காரணம் யார்?"

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

"சிலர் தனது செயலால் துன்பம் விளையவில்லை. தனது துன்பத்திற்குக் காரணம் பிறரே என எண்ணுகின்றனர் ! எவரும், எவருக்கும் எத்தகைய கெடுதலும் தனது விருப்பம் போல் செய்துவிட முடியாது. தனக்கு வரக்கூடிய இன்பமோ, துன்பமோ, லாபமோ, நட்டமோ, புகழோ, இகழோ, வரவோ, செலவோ, தன்னுடைய செயலிலேயிருந்துதான் பிறக்க முடியுமே தவிர வேறு எங்கிருந்தும் வராது.
ஒவ்வொருவரிடமும்
வினைப்பதிவுகள்
(sins and imprints) உள்ளன.
அப்பதிவுகளை வெளியாக்கித் தூய்மைப்படுத்த வேண்டியது இயற்கையின் நியதி
 (Law of Nature).
அதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதை யாரலும் மாற்ற முடியாது இது இயற்கையின் சட்டம்.
முன்பு செய்த வினைக்கான பலன் இன்று கசப்பாக இருந்தாலும். அந்த விதையை எண்ணங்களால், உணர்வுகளால், வார்த்தைகளால், செயல்களால் நாம் பிரபஞ்சத்தில் கடந்தகாலத்தில் பதிவு செய்ததின் விளைவுகளை தான் நாம் இன்று அனுபவிக்கிறோம்.
பலர் இதை மாற்ற நினைக்கின்றனர்.
சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானத்தில் ஏறிவிட்டு திடிரென செல்ல வேண்டிய இடம் மதுரை அல்ல கோவை என நாம் உணர்ந்தால் கூட நம்மால் அதை மாற்ற முடியாது அது போல் தான் வினையின் பலனும்.
விதைப்பதற்கு முன்பே வினை செய்வதற்கு முன்பே அதன் இறுதி விளைவு நன்மை கொடுக்கும் என உங்கள் மனசாட்சி சொன்னால் அந்த வினையை செயலை செய்யுங்கள்.
அதைவிட்டு பேராசையால் அல்லது ஆணவத்தால் அல்லது நம்மால் எதையும் செய்ய முடியும் என்ற கர்வத்தால் சில செயல்களை செய்து விட்டு பிறகு அதன் பலன் வரும் போது அதை ஏற்க மறுத்தால் நாம் அதிலிருந்து விடுபட முடியுமா? நாம் நம் அறிவை பயன்படுத்தி எவ்வளவு முயற்சி செய்தாலும் வினைபயனை பொறுத்துதான் பலன் அமையும்.
எவ்வளவு தான்
ஒருவருக்கு தீவிர சிகிச்சையளிக்கும் போதும் பெரிய மருத்துவமனையில் பெரிய பெரிய மருத்துவர்கள் கூட கடைசியில் சொல்லும் வார்த்தை இதுதான் நாங்கள் முயற்சிகிறோம் ஆனால் இறைவன் கையில் தான் இருக்கிறது என்பார்கள்!
அவ்வளவு தான் சில நேரங்களில் நம் அறிவை கொண்டு முயற்சிக்கலாம்.
ஆனால் முடிவு இறைவன் அல்லது இயற்கையின் கையில் உள்ளது.

இந்த இறைவன் இந்த இயற்கை என்ற வார்த்தையின் உள்ளார்ந்த அர்த்தம் நாம் முன்பு கடந்தகாலத்தில் செய்த வினைபயன் தான்.
அதை நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் இது இயற்கையின் நியதி.

பொறியியல் படித்து விட்டு மருத்துராக முடியாது.

மருத்துவம் படித்துவிட்டு பொறியியல் வல்லுனர் ஆக முடியாது.

நாம் முன்பே தேர்வு செய்ய வேண்டும்.
நம் சரியான இலக்கை
சரியான செயல்களை
நாம் தான் தேர்வு செய்ய வேண்டும்.
நாம் தவறான இலக்கை தேர்வு செய்து தவறான செயல்களை செய்து விட்டு இறுதி விளைவு மட்டும் சரியாக இருக்க வேண்டும் என ஆசைபடுவது எப்படி சரியாகும்.
பணத்தை வைத்து அதிகாரத்தை வைத்து ஆள் பலத்தை செல்வாக்கை வைத்து தவறான செயல்களை செய்வது மிக எளிது ஆனால் அதன் விளைவு ஏதோ ஒரு வழியில் நம் முன் வந்து நிற்கும்.

அவர்கள் செல்வாக்கான நபர்களாக இருந்து அவர்கள் மரணம் எப்படி அமைந்தது அலெக்ஸாண்டர் நெப்போலியன் முதல்
ஹிட்லர் ஏன் நம் அரசியல் தலைவர்கள் வரை பல உதாரணங்கள் நமக்கு வெளிப்படையாக தெரியுமே அவர்கள் திடிர் மரணம் அல்லது மிக துன்பமான இறுதிக்காலம் இது அனைத்தும் கர்மவினைதான் என்ன பணம் அதிகாரம் செல்வாக்கு சிலவற்றை மறைக்கலாம்.
ஆனால் பலன் என்பது பொதுவான
இயற்கை சட்டம் விதிவிலக்கு யாருக்குமில்லை நல்லவனோ, கெட்டவனோ
விதி ஒன்றுதான்.
இதை உணர்ந்து நாம் முந்தைய கர்மவினையின் பலனை மனதார ஏற்றுகொண்டால் நம் பிரச்சனைகள் அது என்ன மாதரி பிரச்சனை என்றாலும் விரைவில் சரியாகிவிடும்.
பிறகு இனி இந்த நிகழ்காலத்தில் கர்மவினையின் தாக்கம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் யாருடனும் சண்டையிடாமல் கர்ம நியதியை சிற்றறிவினால் மாற்ற முயற்சிக்காமல்.
அதை முழுமனதுடன் ஏற்று இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த பொன்னான நிகழ்காலத்தில் நாம் என்ன எண்ணத்தை, என்ன உணர்வுகளை, என்ன வார்த்தைகளை, என்ன செயல்களை விதைக்கிறோம் என்பதில் கவனம் செலுத்தி மிகுந்த எச்சரிக்கையாக மிகுந்த விழிப்புணர்வுடன்.
சரியான விதைகளை விதைத்தால், வினைகளை செய்தால் இனிவரும் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
நம் எதிர்கால விதியை கட்டுப்படுத்தும் அதிகாரம் சக்தி நமக்கு கொடுக்கப்
பட்டிருக்கறது.
ஆனால் கடந்தகால வினை பயனை கட்டுபடுத்தும் அதிகாரம் சக்தி கொடுக்கப்
படவில்லை.
இதை உணர்ந்து நாம் எதிர்காலத்தில் நமக்கு வேண்டத்தகாத விளைவுகள் விரும்பத்தகாத எதிர்மறை விளைவுகள் வேண்டாமென்றால் கடந்த கால வினைபயனை முழுமையாக ஏற்று அனுப்பவித்தால் தான் நமக்கு சரியான எதிர்காலத்தை வடிவமைக்கத் தேவையான அனுபவ அறிவும் பக்குவமும் வரும்.

நன்றி!

வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்!

🙏🙏🌹🌹🙏🙏

நல்லதை போற்றுவோம்

M RAMESH:
நல்லதை போற்றுவோம்:

அனைவரும் தனிப்பட்ட குணநலன்களோடுதான் படைக்கப்பட்டுள்ளோம்.இங்கே யாரும் முழுமையானவர் என்று கூற முடியாது.எல்லாமும் முழுமையாக அமைந்து விட்டால் படைத்தவனை மறந்துவிடுவோம், அதனாலே இயற்கை இருப்பதற்கு நன்றி சொல்லி இனபம் காண சொல்கிறது.
யாரெல்லாம் தன்னிடம் இருப்பதற்கு நன்றி உணர்வோடு இருக்கிறார்களோ, அவர்கள் தான் இந்த பூவுலகில் இன்பமாக வாழ்கிறார்கள்.

சந்திக்கின்ற அனைவரிடமும் இருக்கின்ற நல்லதை மட்டும் போற்றுங்கள்,அவரிடம் இன்னும் நல்லவை பெருகும்.
அவரும் அடுத்தவரை போற்றும்போது அது சங்கிலி தொடராக மாறி ஒட்டுமொத்தமான உலகில் உள்ளவரையும்  நேர்மறை சிந்தனையாளனாக மாற்றும்..

மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்..வாழ்த்துவோம் வளர்வோம்..வாழ்த்துக்களுடன் 🙏⛎🌏🙏

உங்களால் முடியும்

M RAMESH:
💪🏽 *இன்றைய* *சிந்தனை*
....................................

''. *உங்களால்* *முடியும்* .''
……………………………

உங்களை நீங்களே இகழாதீர்கள் அது நீங்களே உங்களுக்கு கொடுக்கும் தண்டனை..

உங்கள் பலத்தை அடையாளம் காணுங்கள்.
அது பிறர் படிக்கிற பாராட்டுப் பத்திரம்!

உங்களைப் பிறரோடு ஒப்பிடாதீர்கள்..
அது உங்கள் தனித்தன்மைக்கு நீங்கள் செய்யும் அவமானம்!

உங்கள் பலங்கள் மீது கவனம் செலுத்துங்கள்
அது உங்கள் பலவீனங்களை வெளியேற்றும் ரகசியம்

உங்களுக்குப் பிடித்ததை விருப்பத்துடன் செய்யுங்கள்
அது உங்கள் விசுவரூபதை வெளிப்படுத்தும் சாகசம்..

உங்கள் மீதான விமர்சனங்களைப் பரிசீலியுங்கள்
அது உங்கள் வளர்ச்சிக்கு மற்றவர்கள் போடும் உரம்

உங்களை நீங்களே எடை போடுங்கள்..
அது உங்கள் வெற்றிக்கு நீங்கள் இடும் அச்சாரம்

உங்கள் குறைகளைக் களையுங்கள்
அது அவற்றைக் கடப்பதற்கான முயற்சியின் அடித்தளம்

சாதனைகள் மட்டும் உங்கள் கனவெனக் கொண்டு விடுங்கள் ! சோதனை களெல்லாம் நீங்கள் சுக்கு நூறாக்கி விடுவீர்கள்!

வேதனை பல தாங்கிக் கொண்டு வேள்வித் தீயில் புரண்டெழுந்து வெற்றி வாகை சூடிடுவீர்கள் ..

நீங்கள் தேடுவது எல்லாமே உங்களிடம் நிரம்பிக் கிடக்கிறது! இல்லாத கல்வியை மட்டும் இன்று முதல் தேடிச் செல்லுங்கள்..

ஆம்.,நண்பர்களே..,

நீங்கள் யார் யாரையோ வியந்தது பாராட்டியது போய்,இனி உங்களை உலகமே வியந்து பார்க்கப் போகிறது..

ஒரு உறங்கிக் கொண்டிருக்கும் சரித்திரம் எழுப்பப்பட்டு விட்டது..அறிந்து கொள்ளக் காத்திருங்கள்

அசுர வேகத்தில் கிளம்பி விட்டது! .

ஆம்.., உங்களால் முடியும்..உங்களை நீங்களே நம்புங்கள்..🌸🙏🏻🌏⛎🙏💐

வெற்றி வார்த்தைகளுக்குள் இருக்கிறது... வெளியே தேடாதீர்கள்!


வெற்றி வார்த்தைகளுக்குள் இருக்கிறது... வெளியே தேடாதீர்கள்!

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


ஒரு அதிகாலை வேளையில், வெளியூர் செல்வதற்காக பஸ் நிலையம் நோக்கிச் சென்றார் கார்மேகம். பஸ்சைப் பிடிக்கும் அவசரத்தில் வேகமாகப் போய்க்கொண்டிருந்தார். அவர் செல்ல வேண்டிய பேருந்து இன்னும் அரை மணி நேரம் கழித்துதான் வரும் என்று சொல்லிவிட்டார்கள். பைக்குள் இருந்து மொபைல் போனை எடுத்துப் பார்த்தார். அப்போது முக்கியமான ஒரு செய்தியை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லாமல் வந்துவிட்டது நினைவுக்கு வந்தது. டயல் செய்தார். உங்கள் இருப்பில் போதுமான பேலன்ஸ் இல்லை' என்று ஒரு பெண்குரல் ஒலித்தது.சரி... வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பலாம் என்றால் அதற்கும் வழியில்லை. டேட்டாவும் காலியாகி விட்டது. அருகே ரீசார்ஜ் கடை எதுவும் இருக்கிறதா, என்று சுற்றும் முற்றும் பார்த்தார். ஒரெயொரு கடை இருந்தது. ஆனால், மூடிவைத்திருந்தார்கள்.
சிறிது தூரம் நடந்தார். அவர் கண்ணில் ஒரு ரெஸ்டாரன்ட் பட்டது. இங்கே வைஃபை இலவசம்' என்று எழுதப்பட்டிருந்தது. அவசரமாக, அந்தக் கடையை நோக்கிச் சென்றார். திடகாத்திரமான இளைஞன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவனிடம் சென்று, வைஃபை பாஸ்வேர்டை கேட்டார் கார்மேகம். அவன் மிகவும் பணிவுடன், டேக் ஃபுட் பர்ஸ்ட்' என்றான்.அந்தக் கடையில் பஃபே சிஸ்டம்' என்பதால், பர்ஸில் இருந்த காசை எடுத்துக் கொடுத்துவிட்டு,
விருப்பமான உணவை எடுத்துக்கொண்ட கார்மேகம், ஒரு இருக்கையைத் தேர்வு செய்து அமர்ந்தார். சாப்பிட்டு முடித்துவிட்டு,அந்த இளைஞனைத் தேடினார். ஆனால், அங்கே அவன் இல்லை.அவன் நின்ற இடத்தில் ஓர் இளம்பெண் நின்றுகொண்டிருந்தார். கார்மேகம், அந்தப்பெண்ணிடம், இங்கே இருந்த இளைஞன் எங்கே?' என்று கேட்டார். அவர் டூட்டி முடிந்துபோய்விட்டார்' என்று அழகான குரலில் அந்தப் பெண் பதில் சொன்னார். சரி... சரி, வைஃபை பாஸ்வேர்டைச் சொல்லுங்க' என்று கேட்டார் கார்மேகம்.டேக் ஃபுட் ஃபர்ஸ்ட்' என்று மெல்லிய குரலில் சொன்னார், அந்தப் பெண். உடனே அவர், அந்தப் பெண்ணை முறைத்துப் பார்த்துவிட்டு,மறுபடியும் போய் பணம் செலுத்திவிட்டு,இப்போது காபி வாங்கி வந்தார். அந்தப் பெண் இருக்கும் திசையை நோக்கிப் பார்த்தபடியே காபி அருந்திக் கொண்டிருந்தார்.
வேகவேகமாகக் குடித்து முடித்ததும் பேப்பர் கப்பைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அந்தப் பெண்ணைத் தேடினார். அங்கே அவரைக் காணவில்லை. வேறொரு வாடிக்கையாளரைப்
பார்க்கப் போய்விட்டாள்!இப்போது, கார்மேகத்துக்குக் கோபம் தலைக்கேறியது. தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார். பேருந்துக்கான நேரம் நெருங்கிக்
கொண்டிருந்தது. அவசரமாக ரெஸ்டாரன்ட் மேனேஜர் எங்கே?' என்று கேட்டு, அவரது இடத்துக்குச் சென்றார். அவர் கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்தார். வாட்ட சாட்டமான உடல்வாகு கொண்ட அவரிடம் கார்மேகம், நீங்களாவது வைஃபை பாஸ்வேர்டைச் சொல்லுங்கள்' என்று கெஞ்சும்குரலில்கேட்டார்.அவர் டேக் ஃபுட் பர்ஸ்ட்' என்றார்.
கார்மேகத்துக்குத் தலை கிறுகிறுத்து விட்டது. மேனேஜரைப் பார்க்கவே பயமாக இருந்ததால், அவரிடம் எதுக்கு வம்பு என்று நினைத்து மறுபடியும் பணத்தைக்கொடுத்து, தனக்கு விருப்பமான சாக்லெட் ஒன்றை எடுத்துக்கொண்டு நேராக மேனேஜரிடமே வந்து நின்றார்.இதோ பாருங்கள். உங்கள் கண்முன்னாலேயே சாப்பிடுகிறேன்... சாப்பிட்டு, முடித்தவுடனாவது பாஸ்வேர்டைச் சொல்லுங்கள்' என்றவாறே, ஒரே மூச்சில் சாப்பிட்டுவிட்டு ஐயா... அவசரம்... எனக்கு வைஃபை பாஸ்வேர்டைச் சொல்ல முடியுமா?' என்று கேட்டார்.மேனேஜர் அவரை உற்றுப் பார்த்துவிட்டு,டேக் ஃபுட் பர்ஸ்ட்' என்று சத்தமாகச் சொன்னார். உடனே பதிலுக்கு கார்மேகமும். `அதான்... ஒண்ணுக்கு மூணு முறை சாப்பிட்டுவிட்டேனே. மறுபடியும் நான் போய் சாப்பிட வேண்டுமா?' எனக் கத்தினார். மேனேஜருக்குப் புரிந்துவிட்டது. அப்போது கார்மேகத்துக்குஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே ஒரு பலகையில் போல்டாக ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார்கள்.
வைஃபை பாஸ்வேர்டு: டேக் ஃபுட் ஃபர்ஸ்ட்!

நீதி: ஒருவர் பேசுவதில் ஒரே அர்த்தம்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அதில் மற்றொரு அர்த்தமும் ஒளிந்திருக்கலாம். அதைக் புரிந்துகொள்பவரே வெற்றியடைகிறார்!

நன்றி!

🌹🌹🙏🙏🌹🌹

நம்பிக்கை எந்தத் திசையிலிருந்தும் வரலாம்... ஜன்னலைத் திறந்து வையுங்கள்


நம்பிக்கை எந்தத் திசையிலிருந்தும் வரலாம்... ஜன்னலைத் திறந்து வையுங்கள்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

அது மக்கள் அதிகம் வசிக்கும் ஒரு நகரம். அங்கே நிறைய கடைகள் இருந்தன. அது தீபாவளி சீஸன். ஆனால், கடைத்தெருவில் மனித நடமாட்டமே இல்லை. சாலை வெறிச்சோடிக் கிடந்தது. எல்லா வியாபாரிகளுமே காரணம் தெரியாமல் விழித்துக்
கொண்டிருந்தனர். ஜவுளி வியாபாரி ஒருவர், 'ஏதாவது ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய கடைக்குள் நுழைந்துவிட மாட்டாரா' என்று சாலையில் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, வெள்ளை நிறத்தில் நவீன ரக கார் ஒன்று, அவரது வாசலில் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி வெள்ளை உடையில் கம்பீரமாக ஒரு செல்வந்தர் அவரை நோக்கி வந்தார். கையில், நவீன ரக செல்போன்கள் ஒன்றுக்கு இரண்டு வைத்திருந்தார்.
தீர்க்கமான பார்வை. அவரைப் பார்த்தவுடன் ஜவுளி வியாபாரி தானாகவே எழுந்து நின்றுவிட்டார்.
ஜவுளிக் கடைக்காரரின் முகக் குறிப்பை புரிந்துகொண்ட செல்வந்தர்,
எங்க வீட்டுத் திருமணத்துக்கு நிறையத் துணிமணிகள் வாங்க வேண்டும்... அதற்கான ஸ்டாக் இருக்கிறதா?’ என்று கேட்டார். 'பல்க்கான ஆர்டர் வரும்போல இருக்கிறது' என்று வியாபாரி மனசுக்குள் மகிழ்ந்தார்.
 உங்கள் தேவை என்னவோ அதைப் பூர்த்திசெய்கிறேன்’ என்றார். அப்படியென்றால், எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்...
உங்கள் வீட்டுப் பெண்ணுக்கு திருமணம் நடத்தினால், எப்படியெல்லாம் ஜவுளி எடுப்பீர்களோ...
அதுபோலவே எடுங்கள். எதிலும் குறையிருக்க வேண்டாம். எவ்வளவு பணமானாலும் செலுத்திவிடுகிறேன். சரி, அட்வான்ஸ் எவ்வளவு வேண்டும்?’ என்று கேட்டார்.கடைக்காரர், இப்போது வேண்டாம் ஐயா.. மொத்தமாக வாங்கிக்கொள்கிறேன்’ என்றார் பணிவுடன். சரி, எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?’ என்று கேட்டார் செல்வந்தர். சொல்லுங்கள்...
செய்கிறேன்’ என்றார். தரமான நகைகள் வாங்க வேண்டும்... உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டார். இருக்கிறார்கள்... இதோ உங்களுக்கு உதவ ஒருவரை உடன் அனுப்பிவைக்கிறேன்’ என்றார் வியாபாரி. தன்னுடைய ஊழியர்களில் ஒருவரை அனுப்பி, அவர் வேண்டுகிற எல்லாவற்றையும் செய்துகொடுக்குமாறும் பணித்தார். அந்த நவீன கார் ஒரு பெரிய ஜுவல்லரியின் வாசலில்போய் நின்றது. இருவரும் கடைக்குள் நுழைந்தனர்.ஜவுளிக் கடை ஊழியர் எல்லாவற்றையும் நகைக் கடை முதலாளியிடம் சொல்லிவிட்டு, செல்வந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றுவிட்டார்.நகைக்கடைக்காரர், உங்களுக்கு எந்த மாதிரியான டிசைனில் நகைகள் வேண்டும்?’ என்று செல்வந்தரிடம் கேட்டார். உங்கள் வீட்டுப் பெண்ணுக்கு திருமணம் நடத்தினால் எப்படியெல்லாம் அலங்கரிப்பீர்களோ அப்படியான நகைகள் வேண்டும்’ என்று சொன்னதோடு, அது சரி...
உங்களுக்கு எவ்வளவு முன்பணம் வேண்டும்?’ என்று கேட்டார் செல்வந்தர். நெருங்கிய நண்பர் அனுப்பியிருக்கிறார்... முன்கூட்டியே பணம் வாங்குவதில்லை. எல்லாம் தயாரான உடன் பணம் கொடுத்தால் போதும்’ என்றார் முதலாளி பவ்யமாக!`சரி, அப்படியென்றால் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?’ என்று செல்வந்தர் கேட்டார். அவர் கேட்ட உதவியை ஒரு போன்காலிலேயே செய்து முடித்தார் நகைக்கடை முதலாளி. பிறகு, அவரிடம் விடைபெற்றுக்கொண்டு செல்வந்தர் கிளம்பிவிட்டார். அவர் போனபின்தான் அவருடைய முகவரியை வாங்கிக்கொள்ள மறந்தது, முதலாளிக்கு நினைவுக்கு வந்தது. 'சரி, நண்பரிடம் இருக்கும், கேட்டு வாங்கிக் கொள்ளலாம்' என்று விட்டுவிட்டார்.திடீரென்று பெரிய ஆர்டர்கள் வந்ததில் ஜவுளி வியாபாரியும் நகைக்கடை முதலாளியும் திக்குமுக்காடிப்போனார்கள். உடனே, நாலாப் பக்கமும் தங்களுக்குத் தேவையான பொருள்களை ஆர்டர் செய்ய ஆரம்பித்தார்கள். ஆர்டர் எடுத்தவர்கள் அதை முடித்துக் கொடுக்க தீவிரமாக வேலை செய்தார்கள். இதனால், அந்தப் பகுதியில் இருந்த வணிகக் கடைகள் எல்லாவற்றிலும் பொருட்களை இறக்குவதும் ஏற்றுவதுமாக பிஸியாக இருந்தார்கள். இதனால், அந்தப் பக்கமாக சென்ற மக்கள், வாகனநெருக்கடியில் சிக்கி சிறிதுநேரம் நின்று செல்ல வேண்டியிருந்தது. நின்றிருந்தவர்கள் கடைகளில் உள்ள புதிய பொருள்களைப் பார்த்து மயங்கினார்கள். கூட்டத்தைப் பார்த்து திகைத்தார்கள். 'தீபாவளிக்கு முன்பே பொருள்களை வாங்கிவிட வேண்டும்' என்று நினைத்தார்கள். ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு கடைகளுக்குள் புகுந்து, தங்களுக்குத் தேவையான பொருள்களை அள்ளிச் சென்றார்கள். இப்படி திடீரென அளவுக்கதிகமான கூட்டம் கூடியதால், அந்தப் பகுதியே பரபரப்பாகிவிட்டது
ஜவுளிக் கடையிலும் நகைக்கடையிலும் குண்டூசி நுழையும் அளவுக்குக்கூட இடமில்லாமல் கடையில் கூட்டம். போட்டிபோட்டுக்கொண்டு மக்கள் பொருள்களை வாங்கிக்
கொண்டிருந்தனர். இந்தக் களேபரத்தில் வியாபாரிகள் இருவரும் செல்வந்தரை மறந்தே போனார்கள்.விடிந்தால், தீபாவளி.
ஆனால், பதினோரு மணி ஆகியும் கட்டுக்குள் அடங்காத வாடிக்கையாளர்களால் திணறிப்போனார் ஜவுளி வியாபாரி. இரு வாரங்களுக்கு முன்னர்ஒரு செல்வந்தர் திருமணத்துக்கான ~ Siva Prakash ~:
ஜவுளிகள் கேட்டிருந்தது அப்போதுதான் அவருக்கு நினைவில் வந்தது. அவர் அவசரமாக, கடையின் சூப்பர்வைசரை அழைத்து,
 செல்வந்தர் கேட்ட ஜவுளிகள் எல்லாம் ரெடியாக இருக்கிறதா...?’
என்று கேட்டார். அவருக்குத் தயார் செய்த அனைத்து ஜவுளிகளையும் மக்களே வாங்கிப்
போய்விட்டார்கள். மறுபடியும் ஆர்டர் செய்ய வேண்டும்’ என்று, தலையைச் சொறிந்துகொண்டே பதில் சொன்னார் ஊழியர். அப்போதுதான் அவருக்கு மற்றொன்றும் ஞாபகத்துக்கு வந்தது. அவரிடம் முகவரி வாங்கிக்கொள்ள மறந்தது. உடனடியாக நகைக்கடை முதலாளிக்குப் போன் போட்டார். எதிர்முனையில், உங்களிடம் இருக்கும் என்று நானும் வாங்கவில்லை’ என்று பதில் வந்தது.தீபாவளி கடந்து மூன்று மாதங்களாகியும் அந்தச் செல்வந்தர் திரும்பி கடைக்கு வரவேயில்லை. ஆனால், அந்தப் பகுதி எப்போதும் மக்கள் திரள் கொண்ட ஏரியாவாக மாறிவிட்டிருந்தது. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அலை அலையாக வந்துகொண்டே இருந்ததால் அந்த செல்வந்தரை தேடும் முயற்சியை இருவரும் கைவிட்டுவிட்டனர். ஒருவேளை வந்திருந்தது கடவுளாக’ இருக்குமோ?

நீதி: நம்பிக்கை எந்தத் திசையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வரலாம். நம்முடைய ஜன்னலைத் திறந்து வைத்திருப்பதே அவசியம்!

நன்றி!

🌹🌹🙏🙏🌹🌹

விடா முயற்சி

விடா முயற்சி - Tamil Motivational Story

 

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள் ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை

லட்சியம் நிறைவேற என்ன செய்ய வேண்டும்? - உண்மைக் கதை! #MotivationStory

லட்சியம் நிறைவேற என்ன செய்ய வேண்டும்? - உண்மைக் கதை! #MotivationStory

`ஒரு கனவு நிஜமாவது ஏதோ மாயாஜாலத்தால் நிகழ்வதில்லை. அதற்கு அரும்பாடுபட வேண்டும்; மன உறுதி வேண்டும்; கடின உழைப்பு வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார் முன்னாள் அமெரிக்கத் தளபதி பதவி வகித்தவரும், அரசியல்வாதியுமான காலின் போவெல் (Colin Powell). நாம் நம் குழந்தைகளைக் கனவு காணச் சொல்கிறோமே தவிர, அதற்காக எப்படியெல்லாம் மெனக்கெட வேண்டும் என்பதைச் சொல்லித் தருவதில்லை. பிறரைப் பார்த்து அல்லது நிறைவேறாத நம் ஆசைகளைத்தான் நம் குழந்தைகளிடம் திணிக்கிறோம். ஒரு கட்டத்தில் பொறியியல் படிப்பில் அதிகமாக மாணவர்கள் சேருகிறார்களா... அதில் நம் பிள்ளைகளைச் சேர்க்கப் பிரயத்தனப்படுகிறோம். டாக்டர் படிப்புக்கு மவுசா... `நீ எப்பிடியாவது டாக்டராகிடணும். இப்பவே `நீட்’-டுக்குத் தயாராகு!’ என்று குழிகள் நிறைந்திருக்கும் ஏதோ ஒரு பாதையைக் காட்டி, பிள்ளைகளைப் போகச் சொல்கிறோம். ஒரு மாணவனுக்கு எதன் மீது ஆர்வம் அதிகமிருக்கிறது என்று கண்டுகொண்டு, அந்தத் துறையில் அவனைத் தயார்ப்படுத்தும் ஆசிரியரோ, பெற்றோர்களோ இங்கே மிகக் குறைவு. விரும்பாமல் செய்கிற 100 வேலைகளைவிட விரும்பிச் செய்கிற ஒரு வேலை சிறந்தது. இந்த உண்மையை உணர்ந்திருந்த ஒரு தந்தையின் கதை இது!


அமெரிக்கா, க்ளீவ்லேண்டிலிருக்கும் (Cleveland) கிளென்வில்லி ஹைஸ்கூலில் (Glenville High School) அந்த மாணவன் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு அப்போது 12 வயது. ஒருநாள் பாடம் எடுத்து முடித்திருந்தார் ஆசிரியை. வகுப்பு முடிய இன்னும் நேரமிருந்தது. மாணவர்களிடம் `நீங்க எதிர்காலத்துல என்னவாக ஆக விரும்புறீங்கனு ஒரு கேள்வி உங்க பாடத்துல இருக்குல்ல... அதுக்கான பதிலை எழுதுங்க!’ என்றார். ஒரு வரி பதில் அது. எல்லா மாணவர்களும் நிமிடத்தில் அதற்கான பதிலை எழுதிவிட்டார்கள். எழுதிய பேப்பரில் தங்கள் பெயரை எழுதி, ஆசிரியையிடம் கொண்டுபோய்க் கொடுத்தார்கள். எல்லா பேப்பர்களையும் படித்துப் பார்த்தார், அவருக்கு திருப்தியாக இருந்தது, அந்த ஒரு மாணவன் எழுதிய பதிலைத் தவிர.

அன்றைக்கு பள்ளிக்கூடம் முடிந்ததும், அந்த மாணவனின் வீட்டுக்குப் போனார் ஆசிரியை. அவர் போன நேரத்தில், அந்த மாணவனின் தந்தையும் வீட்டில்தான் இருந்தார். ஆசிரியையை வரவேற்றார். அமரச் சொன்னார். மனைவியை அழைத்து காபி கொண்டு வரச் சொன்னார். மாணவனுக்கு டீச்சரைப் பார்த்ததும் உதறலெடுக்க ஆரம்பித்துவிட்டது. அதற்குக் காரணமும் இல்லாமலில்லை. அவனுடைய அப்பா மிகவும் கண்டிப்பானவர். டீச்சரோ சாதாரணமாக யார் வீட்டுக்கும் போகிறவரில்லை. `அவர் இங்கே வந்திருக்காருன்னா, என்னைப் பத்தி ஏதாவது புகார் சொல்றதுக்காகத்தான் இருக்கும்’ மாணவனுக்கு நெஞ்சு `திக் திக்’ என்று அடித்துக்கொண்டது.

``சொல்லுங்க மேடம்... என்ன விஷயம்?’’ நேரடியாக விஷயத்துக்கு வந்தார் தந்தை.

``ஒண்ணுமில்லை. இன்னிக்கி ஸ்கூல்ல ஒரு டெஸ்ட்... ஸ்டூடன்ஸ்கிட்ட உங்க கனவு என்ன, எதிர்காலத்துல நீங்க என்னவா ஆக விரும்புறீங்கனு ஒரு கேள்வி... அதுக்கு உங்க பையன் அபத்தமான ஒரு பதிலை எழுதியிருந்தான்...’’

அப்பா, மகனை அழைத்தார். ``பேப்பர்ல நீ என்ன பதில் எழுதியிருந்தே?’’

அவன் தயங்கினான். அப்பாவையும், ஆசிரியையும் மாறி மாறிப் பார்த்தான். பிறகு சொன்னான்... ``டி.வி ஷோவுல பெரிய ஆளா வரணும்னு எழுதியிருந்தேன்.’’

அப்பா, ஆசிரியையின் பக்கம் திரும்பினார். ``இதுல என்ன தப்பு?’’

``என்ன சார் நீங்களும் புரியாத மாதிரி கேட்குறீங்க... சாத்தியமே இல்லாத ஒண்ணை எழுதுறது அபத்தமில்லையா? இந்தப் பையனாவது... டி.வி ஷோவுல வர்றதாவது! இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படலாமா?’’

அப்பா ஒரு கணம் யோசித்தார். மகனை அவன் அறைக்குப் போகச் சொன்னார். அந்த மாணவன் பயந்து, நடுங்கியபடி தன் அறைக்குள் போனான். இன்றைக்கு அப்பா அடி வெளுத்து வாங்கிவிடுவார் என்று நினைத்துக்கொண்டான்.

அவர் இப்போது ஆசிரியையிடம் சொன்னார்... ``ரொம்ப நன்றி மேடம். நான் என் பையனை இனிமே கவனமாப் பார்த்துக்குறேன்.’’

ஆசிரியை கிளம்பிப் போனார். அப்பா, மகனின் அறைக்குள் நுழைந்தார். ``சொல்லுப்பா... இன்னிக்கி டீச்சர் எழுதச் சொன்ன கேள்விக்கு புத்தகத்துல இருக்குற பதில் என்ன?’’

``புத்தகத்துல இருக்குற பதில், `நான் ஃபுட்பால் ப்ளேயராக ஆகணும்’கிறது. எல்லாரும் அதைத்தான் எழுதினாங்க. எனக்கு என்னவோ, எதிர்காலத்துல டி.வி-யில பெரிய ஆளா வரணும், எல்லாரும் என்னைப் பார்க்கணும்னு ஆசை. அதனாலதான் `டி.வி ஷோவுல வேலை பார்க்கணும்கிறது என் ஆசை’னு எழுதிவெச்சேன்.’’

அப்பா, மகனை நெருங்கினார். அவன் பயத்தோடு அவரைப் பார்க்க, அவனைத் தழுவிக்கொண்டார்.

``நீ ஒண்ணு பண்ணு. உன் டீச்சர் எதிர்பார்க்கிற பதிலை எழுதி, அவங்ககிட்டயே குடுத்துடு. ஆனா, உண்மையிலேயே நீ என்னவாகணும்னு நீ விரும்புறியோ, அந்தக் கனவை ஒரு பேப்பர்ல எழுதி உன் டெஸ்குக்குக் கீழே வெச்சுக்கோ. அது உனக்கே உனக்கான பேப்பர். தினமும் காலையில படுக்கையிலருந்து எந்திரிச்சதும் அதை எடுத்துப் படிச்சுப் பாரு; ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னால அதைப் படி... விடாமப் படி... நீ நினைக்கிற, விரும்புற வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்.’’ அப்பா போய்விட்டார்.

அந்த மாணவன், அப்பா சொன்னதை வேதவாக்காக நினைத்து அப்படியே கடைப்பிடித்தான். அடுத்த பதினாறே ஆண்டுகள்... அந்த மாணவர் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிவிட்டார். கனவு கண்டு, அதை நிஜமாகவும் ஆக்கிய அந்த மாணவர் அமெரிக்காவின் சிறந்த தொலைக்காட்சித் தொகுப்பாளர்களில் ஒருவர் எனக் கருதப்படும் ஸ்டீவ் ஹார்வி (Steve Harvey).

ஒரு கட்டத்தில் வாரத்தின் ஏழு நாள்களும் தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் தோன்றிக்கொண்டிருந்தார் ஸ்டீவ் ஹார்வி. அவ்வளவு பிரபலமான மனிதராக ஆன பின்னரும், தன் பழைய டீச்சரை அவர் மறக்கவில்லை. ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தன்று தன் டீச்சருக்கு ஒரு டி.வி-யை பரிசாக அனுப்பிவைப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருநாள், தொலைபேசியில் டீச்சர் அழைத்தார்... ``ஹார்வி! வீட்டுல நிறைய டி.வி சேர்ந்து போச்சு... இனிமே வேண்டாமே!’’

``பரவாயில்லை டீச்சர். அதுபாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும்...’’ மென்மையான குரலில் பதில் சொன்னார் ஹார்வி.     

நன்றி விகடன்

கல் சுவரைவிட வலுவானது, சிலந்திவலை! நம்பிக்கைக் கதை #MotivationStory

கல் சுவரைவிட வலுவானது, சிலந்திவலை! நம்பிக்கைக் கதை #MotivationStory

கதை

`ஒருவரை நம்பலாமா, வேண்டாமா என்பதைக் கண்டுபிடிப்பதற்குச் சிறந்த வழி அவரை நம்புவதுதான்’ என்று சொல்லியிருக்கிறார் எர்னெஸ்ட் ஹெம்ங்வே (Ernest Hemingway). மனிதர்களை நம்புவதில் மட்டுமல்ல... எதன் பொருட்டாக இருந்தாலும், அது ஆழமானதாக இருக்கவேண்டியது அவசியம். `நம்பினார் கெடுவதில்லை’ தொடங்கி `என்னை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை... நம்பாமல் கெட்டவர்கள் ஏராளம்’ என்கிற எம்.ஜி.ஆரின் பிரபல வசனம் வரை நம்பிக்கை உணர்த்தும் செய்திகள் ஏராளம். அழுத்தமாக, தீவிரமாகக்கூட வேண்டாம்... ஒரே ஒரு கணம் ஒன்றில் நம்பிக்கை வைத்தால்கூட அது நமக்கு அள்ளித்தரும் அற்புதம் அபாரமானது. அது எப்படி என்பதை விளக்குகிறது இந்தக் கதை.
அது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம். அமெரிக்காவின் கப்பற்படையைச் சேர்ந்த வீரன் அவன். ஓர் அசந்தர்ப்பமான சூழ்நிலையில் தன் படைப பிரிவிலிருந்து பிரிந்துவிட்டான். ஒரு சின்னஞ்சிறிய தீவில் மாட்டிக்கொண்டான். `படைப்பிரிவைத் தேடி, அவர்களோடு சேர்ந்துகொள்ள வேண்டுமே...’ என்கிற ஏக்கம் ஒருபுறம். `எதிரிகளிடம் மாட்டிக்கொண்டுவிடக் கூடாதே’ என்கிற பயம் ஒருபுறம்.
அந்த கப்பற்படை வீரன் கடற்கரையோரமாக நடந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது... உணவும் கொஞ்சம் நீரும்கூட இருந்தது. ஆனால், எதிரிகள் குறித்த பயம் மட்டும் அவனைப் படுத்தியெடுத்தது. கொஞ்சம் தூரம் நடந்திருப்பான். ஒரு சத்தம் அவனை உலுக்கியது. காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு சத்தத்தைக் கவனித்தான். செடிகளை விலக்கிக்கொண்டு, சருகுகளை மிதித்துக்கொண்டு சிலர் வேகமாக முன்னேறி வரும் சத்தம். அவனுக்குப் பயம் உறுதியாகிவிட்டது. நிச்சயம் வருபவர்கள் எதிரிகளாகத்தான் இருக்க வேண்டும். தன்னந்தனியாக இருக்கிறான். கூட அவன் தோழர்கள் யாரும் இல்லை. என்ன செய்வது. ஒளிவதைத் தவிர வேறு வழியில்லை.
அவசர அவசரமாக ஒளிந்துகொள்ளத் தோதான இடம் ஒன்றைத் தேடினான். அருகில் ஒரு குன்று இருந்தது. அதன்மேல் வரிசையாகச் சில குகைகள் இருப்பது தெரிந்தது. விறுவிறுவென்று அந்தக் குன்றில் ஏறினான். நான்காவதாக இருந்த குகைக்குள் நுழைந்து உள்ளே போய் ஒடுங்கி, உட்கார்ந்துகொண்டான். கொஞ்சம் வசதியாக இருந்தது குகை; பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தான். கப்பற்படையில் இருந்ததால், ராணுவ நடைமுறைகளையும் செயல்பாடுகளையும் அவன் நன்கு அறிவான். வருபவர்கள் நடந்தவிதத்தை வைத்து அவர்கள் யாரையோ தேடிவருகிறார்கள் என்பதை அவன் உணர்வு சொன்னது. `அப்படித் தேடிவரும் பட்சத்தில் நிச்சயமாக இந்தக் குகைகளையும் விட்டுவைக்க மாட்டார்கள். அப்படியானால் என்னைக் கண்டுபிடித்துவிடுவார்கள். கண்டுபிடித்துவிட்டால்..? அவ்வளவுதான் உயிர் உடலில் தங்காது’ இப்படி நினைத்ததும் அவன் உடல் நடுங்கியது.
`இப்போது என்ன செய்வது? நாம் தப்பிப்போம் என்று நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. பிரார்த்தனை... அதை மட்டும்தான் இப்போது செய்ய முடியும்.’ அவன் கண்களை மூடி பிரார்த்தித்தான். `கடவுளே... என்னை என் எதிரிகளிடமிருந்து காப்பாற்று. உன்னை மனமார நம்புகிறேன்... மனமுருக வேண்டுகிறேன்...’ அவன் பிரார்த்தித்த அந்த ஒரு கணத்தில், தான் நிச்சயம் காப்பாற்றப்படுவோம் என்று முழுமனதோடு நம்பினான்.
`ஆனால்... அது என்ன..? கும்பலாகச் சிலர் அந்தக் குன்றின் மேல் ஏறிவருவதுபோலச் சத்தம் கேட்கிறதே..! நிச்சயம் அவர்கள்தான்... எதிரிகள்தான். அய்யோ... நான் என்ன செய்வேன்?’
இப்படி அவன் யோசித்துக்கொண்டிருந்தபோதே அதைப் பார்த்தான். அது ஒரு சிறிய சிலந்தி. உள்ளே ஒரு மனிதன் இருக்கிறானே என்கிற பயமில்லாமல், அது பாட்டுக்கு வேலையில் இறங்கியது. அந்தக் குகையின் வாசலில் ஒரு வலையைப் பின்ன ஆரம்பித்தது. அந்த வீரனுக்கு அது வேடிக்கையாக இருந்தது.
`நான் என்ன கேட்டேன்... கடவுள் என்ன செய்கிறார்? கல்லாலான ஒரு சுவரைக் கொண்டு இந்தக் குகை வாசலை கடவுள் மூடியிருக்க வேண்டாமா? ஒரு சிலந்தியை அனுப்பிவைத்திருக்கிறாரே...’ என்று நினைத்தான்.
இப்போது சில படை வீரர்கள் வரும் சத்தம் நன்றாகக் கேட்டது. அவர்கள் மேலே வந்துவிட்டார்கள். முதல் குகையருகே அவர்கள் நிற்பதும் அதற்குள்ளே ஓர் ஆள் நுழைந்து, `இங்கே யாரும் இல்லை’ என்று சொல்வதும் அவன் காதில் விழுந்தது. அவனுக்கு உடல் தூக்கிவாரிப்போட்டது. குகையின் கடைசி நுனிக்குப்போய் கற்பாறையை ஒட்டி உட்கார்ந்துகொண்டான்.
அந்தச் சிலந்தி வெளியே கேட்கும் ஆள் அரவம், உள்ளே அவன் இருப்பது எதையும் கண்டுகொள்ளவில்லை. அதுபாட்டுக்கு வலை பின்னுவதில் பிஸியாக இருந்தது.
அவர்கள் இரண்டாவது குகைக்குள் நுழைந்து தேடிப் பார்த்தார்கள். எதுவும் அகப்படாமல் அடுத்த குகைக்குள் நுழைந்தார்கள். அதற்கடுத்து அவர்கள் இவனிருக்கும் குகைக்குள்தான் வந்தாக வேண்டும். எப்படியும் ஒருவன் உள்ளே வந்து பார்க்கத்தான் போகிறான். `கடவுளே...’ அவன் கண்களை மூடிக்கொண்டான். அவன் இதயம் வேகமாகத் துடித்தது. அவனிருந்த குகை வாசலில் சிலர் நிற்பதும், `நிச்சயம் இதுக்குள்ள யாரும் இருக்க மாட்டாங்க’ என்று ஒருவன் சொல்வதும் கேட்டது. அவர்கள் குகைக்குள் தேடாமலேயே அங்கிருந்து நகர்ந்துபோனார்கள். அன்றைக்கு அந்த வீரன் உயிர்பிழைத்தேவிட்டான்.
இப்போது அவனுக்குக் காரணம் புரிந்துவிட்டது. குகை வாசலில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறது ஒரு சிலந்தி. அப்படியானால், சிறிது நேரத்துக்கு முன்னால் யாரும் அதற்குள் நுழைந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி நினைத்துத்தான் எதிரிகள் உள்ளே நுழையாமல் சென்றுவிட்டார்கள்.
அவன் கண்களை மூடிக்கொண்டு சொன்னான்... `கடவுளே... மிக்க நன்றி. என்னை மன்னித்துவிடு கடவுளே... ஒரு கல் சுவரைவிட நீ அனுப்பிய சிலந்தியின் வலை வலுவானது என்பதை நான் மறந்துவிட்டேன

தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்! - யதார்த்தம் உணர்த்தும் கதை! #MotivationStory

தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்! - யதார்த்தம் உணர்த்தும் கதை! #MotivationStory

கதை


ஒருவரைச் சரியாக எடைபோடும் திறமை அனுபவத்திலிருந்து கிடைக்கும்; ஒருவரைத் தவறாக எடைபோடும்போதுதான் அனுபவம் கிடைக்கும்’ - அமெரிக்காவின் கம்ப்யூட்டர் சயின்டிஸ்ட் ஜிம் ஹார்னிங் (Jim Horning) அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். வாழ்க்கை நமக்குப் பல அனுபவங்களைத் தருகிறது. அவற்றில் சில அதிர்ச்சி தரும்; சில ஆச்சர்யப்படுத்தும். அந்த அனுபவங்களில் மிக முக்கியமானது, பிறரைத் தவறாக நினைக்கும் சுபாவம். கோபம், ஆத்திரம், ஏமாற்றம், விரக்தி போன்றவற்றால் ஒருவரைத் தவறாக எடைபோட்டுவிடுவோம். அதை வெளிப்படுத்தியும்விடுவோம். பிறகு அதை நினைத்துக் குறுகிப்போய் நிற்போம். இந்த அனுபவம் எல்லோருக்குமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கிடைத்திருக்கலாம். ஆனால், இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால், அவருக்கு நாம் நம்மால் முடிந்த நல்லதைச் செய்ய வேண்டும். அந்தச் சமயத்தில் நேசத்தைக் கொட்டலாம்; பெருந்தன்மையோடு நடந்துகொள்ளலாம். உங்களுடைய தவறிலிருந்து மற்றவரைப் பாராட்ட, போற்ற, கொண்டாடக் கற்றுக்கொள்ளும் பாடம் அது. இந்த யதார்த்தத்தை உணர்த்தும் கதை ஒன்று...

அது லண்டனிலிருக்கும் புறநகர்ப் பகுதி. காலை நேரம். ஜான் ஒரு புழுதிபடிந்த சாலையில் நடந்துகொண்டிருந்தான். மென்மையான சுபாவம் கொண்டவன், பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமுள்ளவன், பிரதி பலன் பார்க்காமல் யாருக்கு வேண்டுமானாலும் உதவுபவன். சாலையோரத்தில் ஒரு பர்ஸ் கிடப்பதைப் பார்த்தான் ஜான். அதை எடுத்தான். திறந்தான். உள்ளே ஒன்றுமில்லாமல் காலியாக இருந்தது.

``என் பர்ஸ்... என் பர்ஸ்...’’ என்று ஒரு குரல் கேட்டது. ஒரு நடுத்தர வயதுள்ள பெண்மணி அவனுக்கு எதிரே நின்றுகொண்டிருந்தாள். அவளுடன் ஒரு போலீஸ்காரரும் இருந்தார்.

``சார்... இது என் பர்ஸ்தான் சார்...’’ என்று போலீஸ்காரரிடம் சொன்னாள் அந்தப் பெண். ஜான், பர்ஸை அவளிடம் கொடுத்தான். அதை அவசரமாகத் திறந்து பார்த்தவள் கலங்கி அழ ஆரம்பித்தாள்.

பயம்

``சார்... இதுல பணம்வெச்சிருந்தேனே... அது எங்கே? கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் சார்... என் மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்னு எடுத்துட்டு வந்தேன். அப்பா இல்லாத பிள்ளை அவன். தயவு செஞ்சு குடுத்துடுங்க சார்... நான் ஸ்கூல்ல போய் ஃபீஸ் கட்டிட்டு, அப்புறம் ஆபீஸ் போகணும்...’’ அவள் அவன் காலில் விழாதகுறையாக புலம்பினாள்.

ஜான், வேறு எதுவும் பேசாமல் தன் பையில் வைத்திருந்த பணத்தையெல்லாம் எடுத்து அவளிடம் கொடுத்தான். ``மன்னிச்சிருங்க... சீக்கிரம் போங்க!’’ என்றான். அவள் பணத்தோடு திரும்பிப் போனாள். போலீஸ்காரர், ஜானை விசாரிப்பதற்காக அழைத்துப் போனார்.

அந்தப் பெண் தன் மகன் படிக்கும் பள்ளிக்குச் சென்று பணத்தை எண்ணிப் பார்த்தபோதுதான், அவள் வைத்திருந்த தொகையைவிட அதிகமாக இருந்தது தெரிந்தது. ஒரு கணம் அவள் அதிர்ந்துபோனாள். மகனின் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு வந்தவள், அதோடு அந்தச் சம்பவத்தை மறந்தே போனாள்.

***

அடுத்த மாதம் அதேபோல ஒரு தினம்... அதே பெண்மணி. சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தாள். சற்று தூரம் சென்றதும் உள்ளுணர்வு உறுத்த திரும்பிப் பார்த்தாள். சற்று தூரத்தில் ஒருவன் அவளைப் பின்தொடர்ந்து வருவதுபோலத் தோன்றியது. சாலையோரமாக நின்றாள். அவனும் நின்றான். அவள் சற்று வேகமாக நடந்தாள்... அவனும் வேகமாக நடந்து வந்தான். அந்த மனிதன் தன்னைத்தான் பின்தொடர்ந்து வருகிறான் என்பது அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது. தன் கைப்பையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். `ஐயோ... அந்த ஆள் என்னை வழிமறிச்சு பணத்தைப் பிடுங்கிட்டா என்ன செய்யறது?’ - பயம் தொற்றிக்கொள்ள அக்கம் பக்கம் யாராவது உதவ மாட்டார்களா என்று பார்த்தபடியே நடந்தாள்.

சற்று தூரத்தில் ஒரு போலீஸ்காரர் தெரிந்தார். விரைந்து அவரருகே போனாள். அவர், கடந்த மாதம் அவளுடன் வந்திருந்த அதே போலீஸ்காரர். அவள், அவரிடம் ``என்னை ஒருத்தன் ஃபாலோ பண்றான் சார். எனக்கு பயமா இருக்கு... அங்கே பாருங்க...’’ என்று பின்னால் கையைக் காட்டினாள்.

அதே நேரத்தில் அவளைப் பின்தொடர்ந்து வந்த மனிதன் சுருண்டுபோய் சாலையிலேயே விழுந்துவிட்டான். போலீஸ்காரரும் அந்தப் பெண்ணும் அவனருகே ஓடினார்கள். அவன், அதே ஜான். போலீஸ்காரர் அவனைக் கைகொடுத்து தூக்கிவிட்டார்.

பிந்தொடர்தல்

``என்ன ஆச்சுப்பா?’’ காவலர் விசாரித்தார்.

``நல்ல ஜுரம் சார்.. தலை சுத்துற மாதிரி இருந்தது. கீழே விழுந்துட்டேன்...’’

இப்போது போலீஸ்காரர் அந்தப் பெண்ணிடம் திரும்பினார்... ``மேடம்... அன்னிக்கி இவர் உங்ககிட்ட கொடுத்தது உங்களோட பணம் இல்லை; இவரோடது. இவர் திருடனில்லைங்கிறது விசாரிச்சப்போதான் தெரிஞ்சுது. நீங்க உங்க மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்னு அழுது புலம்பினதைத் தாங்காம தன்னோட பணத்தைக் கொடுத்திருக்கார்...’’

அந்தப் பெண் ஆச்சர்யத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள். போலீஸ்காரர் ஜானின் பக்கம் திரும்பினார். ``சரிப்பா... இன்னிக்கி எதுக்கு இந்த அம்மா பின்னாலயே வந்தே?’’

``இல்லை சார்... எப்படியும் இன்னிக்கோ, நாளைக்கோ இவங்க மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டவேண்டியிருக்கும். அப்போ யாராவது இவங்க பணத்தைத் திருடிட்டுப் போயிடக் கூடாதுல்ல? அதனாலதான் பின்னாலயே துணைக்கு வந்தேன்...’’